பல வருடங்களாக நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்து பின்பு தனது விடா முயற்சியினால் ரசிகர்களுக்கு நல்ல நல்ல திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் தான் தல அஜித் இவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது உண்டு.
என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான் அதிலும் குறிப்பாக தல அஜித் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் திரையரங்குகளில் அதிகம் வசூல் செய்திருக்கும் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் பல சாதனைகளையும் படைத்து வருகிறது.
மேலும் தல அஜித் தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை நாம் பார்த்திருப்போம் அதிலும் குறிப்பாக நாங்க வேற மாதிரி என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியான பொழுது யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து தற்பொழுது வரை சாதனை படைத்து வருகிறது
தல அஜித் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார் குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் கார் ரேஸ்,பைக் ரேஸ்,துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் தனது ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகிறார் சமீப காலமாக இவரது புகைப்படங்கள் தான் சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்தவகையில் தற்போதும் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது பள்ளி படிக்கும் வயதில் தல அஜித் பார்ப்பதற்கு மீசை கூட இல்லாமல் மிகவும் ஸ்லிம்மாக அழகாக இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இது அஜித் தானா என பல கேள்விகளை எழுப்புவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.