தோனி, பந்த், ஹர்திக் ஓய்வு அறையில் கண்ணீரை நிறுத்த முடியாமல் அழுதனர்.. என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் – சஞ்சய் பங்கர் பேச்சு.!

World Cup 2023 : இந்தியாவில் உலகக்கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளது ஐந்திலும் வெற்றியை ருசித்து உள்ளது நாளை இங்கிலாந்து அணியை எதிர்த்து பலப்பரிச்சை நடத்த  இருக்கிறது இந்த போட்டியிலும் இந்திய அணி ஜெயிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்தது நவம்பர் இரண்டாம் தேதி ஸ்ரீலங்கா அணியை எதிர்த்து பல பரிசை நடத்த இருக்கிறது. அடுத்ததாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – சவுத் ஆப்பிரிக்கா மேட்ச் நவம்பர் 5ஆம் தேதி நடக்க இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து பெரிய பெரிய அணிகளுடன் போட்டி போட இருக்கிறது.

தளபதி 68 -ல் விஜய்க்கு தங்கையாக நடிக்க 5 நடிகைகளுடன் ஆடிஷன் நடத்திய வெங்கட் பிரபு.. தேர்வான நடிகை யார் தெரியுமா.?

இதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட மறுபக்கம் பேட்டர்கள் அடித்து துவம்சம் பண்ணுகின்றனர் குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே. எல். ராகுல் அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்திய அணி எப்படியும் அரை இறுதி போட்டிக்கு நுழைந்து விடும் என பலரும் கூறி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சய் பங்கர் ஒரு பேட்டியில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

லியோ படத்துக்கு வந்த சோதனை.. 7 வது நாளில் தியேட்டருக்கு வந்த கூட்டம் இவ்வளவுதான்.? சினிமா பிரபலம் பேட்டி

Dhoni
Dhoni

அவர் சொன்னது என்னவென்றால்.. 2019 ஆம் ஆண்டு உலககோப்பை அரை இறுதி தோல்விக்கு பிறகு தோனி, பந்த், ஹர்திக் பாண்டியா உள்பட பல வீரர்கள் கண்ணீரை நிறுத்த முடியாமல் ஓய்வு அறையில் அழுதனர். அது மறக்க முடியாத ஒரு நாள்  என அவர் கூறியிருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் 2019 -ல் மிஸ் ஆயிடுச்சு இந்த தடவை சம்பவம் பண்றோம் 2023 உலக கோப்பை நமக்குத் தான் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

rohit
rohit