பொங்கல் தினத்தன்று வெளியான தனுஷ் திரைப்படங்கள்.. வசூல் வேட்டையாடும் கேப்டன் மில்லர்!

Dhanush : முக்கிய மற்றும் பண்டிகை நாட்களில் படங்கள் வெளிவருவது வழக்கம் அந்த வகையில் தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி கோலாகலமாக வெளியானது படம் சிறப்பாக இருப்பதால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான 4 படங்களை பற்றி இங்கு பார்ப்போம்..

ஜவகர் மித்திரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குட்டி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சொல்லி கொள்ளும்படி வசூல் அள்ளவில்லை..

பிரபல நடிகையிடம் காதலை சொல்லாமல் ஒருதலை காதலாக மாறிய ரஜினியின் காதல்.! தேவதாசன் கதையை போல் என் கதையாச்சு..

2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ஆடுகளம் முழுக்க முழுக்க கோழிச்சண்டையை மையமாக வைத்து படம் உருவாகி இருந்தாலும் இந்த படத்தில் வரும் பாடல் காதல் போன்றவை ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தது படமும் வெற்றி பெற்றது.

2020 ஆம் ஆண்டு தனுஷ் சினேகா நடிப்பில் உருவான திரைப்படம் பட்டாசு இந்த படம் ஒரு தற்காப்பு கலவையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் நல்ல கருத்துக்கள் நிறைந்திருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சுமாராக ஓடியது.

மொழி திணிப்பு ஒழிக! ஹிந்தி தெரியாது போயா! வெளியானது கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டீசர்….

2024 ஆம் ஆண்டு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் கேப்டன் மில்லர் படம் அதிரடி, ஆக்சன், எமோஷனல் என இருந்ததால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது முதல் நாள் மட்டுமே 10 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.