மொழி திணிப்பு ஒழிக! ஹிந்தி தெரியாது போயா! வெளியானது கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டீசர்….

Raghuthatha Official Teaser : நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ரகு தாத்தா. இந்த திரைப்படம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக உருவாகியுள்ளது என்பது இந்த திரைப்படத்தின் ட்ரைலரை பார்க்கும்போதே புரிகிறது. இந்த திரைப்படத்தை கே ஜி எஃப், காந்தாரா போன்ற திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இயக்குனர் சுமன் குமார் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய், ஆனந்த சாமி, ராஜேஷ், பாலகிருஷ்ணன் போன்ற பலர்  நடித்துள்ளனர். ட்ரெய்லரில்  கீர்த்தி சுரேஷ்க பள்ளியில் என்சிசி உடையில் ஹிந்தி தெரியாது தமிழில் சொல்லுங்க சார் எனக் கூறுகிறார். அதோடு ஹிந்தி பாஸ் பண்ணா தான் ப்ரமோஷன் உண்டுனா எனக்கு பிரமோஷனே வேண்டாம் எனவும் மொழி திணிப்பு ஒழிக, ஹிந்தியை திணிக்காதே போன்ற வசனங்களுடன் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக பல கோஷங்களை எழுப்புவது போன்று டிரைலர் வெளியாகி உள்ளது.

கேப்டன் மில்லர் VS அயலான் : கேப்டன் மில்லரிடம் அடிபணிந்ததா அயலான் ஏலியன்.! வசூலில் யார் முதலிடம்.?

எனவே இந்த திரைப்படம் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழர்கள் மனதில் கீர்த்தி சுரேஷுக்கு பெரிய இடம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்