பிறந்தநாளுக்கு சர்ப்ரைசாக வெளிவந்த தனுஷின் மாறன் ப்ஸ்ட் லுக் போஸ்டர்!! இதோ…

dhanush
dhanush

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன்,கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் இத்திரைப்படத்திற்கு பிறகு தனுஷின் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது.

அந்த வகையில் கோலிவுட், பாலிவுட், ஹோலிவுட் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீசுக்கு முன்பு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் வெளியானதற்கு பிறகு கலவை விமர்சனத்தைப் பெற்றது.

இருந்தாலும் தனுஷின் ரசிகர்கள் இத்திரைப்படத்தினை கொண்டாடி வந்தார்கள். இன்று தனுஷின் பிறந்தநாள் என்பதால் கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள் தனுஷின் காமன் டிபிஐ வைரலாகி வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் இன்று காலையில் இருந்தே ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று அனைவரும் தங்களது வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் நடித்து வரும்  D 43வது திரைப்படத்தினை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அந்தவகையில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இத்திரைப்படத்திற்க்கு மாறன் என்று பெயர் வைத்துள்ளார்கள். இதோ அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.