அச்சு அசல் தேவயானி போலவே இருக்கும் தேவயானியின் மகள். இவ்வளவு பெரிய மகளா வாயடைத்துப் போன ரசிகர்கள்.

devayani

நடிகை தேவயானியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர், அதனால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர். நடிகை தேவயானி முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, வங்காளம், என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார், சினிமா மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கோலங்கள் சீரியலில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர்.. அதுமட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

devayani
devayani

நடிகை தேவயானியும் இயக்குனர் ராஜ்குமாரனும் காதலித்து வந்தார்கள் ஆனால் இவர்களின் காதலுக்கு தேவயானியின் அம்மா சம்மதம் தெரிவிக்கவில்லை, அதனால் தேவயானி மற்றும் ராஜ்குமார் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் ஏப்ரல் 9ஆம் தேதி 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது.

devayani

இந்த  தம்பதிகளுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், இந்த நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் தேவயானியின் மகள் இருக்கிறார்கள்.

devayani

அதை பார்த்த ரசிகர்கள் தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகளா அதுவும் அச்சு அசலாக தேவயானி போலவே இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

devayani