குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் ஆண்ட்ரியன் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கும் நிலையில் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
எனவே இந்த நிகழ்ச்சியை காப்பியடித்து பல ரியாலிட்டி ஷோக்களை மற்ற மொழி தொலைக்காட்சிகள் அறிமுகம் செய்து வருகிறது ஏன் சொல்லப்போனால் தமிழில் கூட சன் டிவியில் விஜய் சேதுபதியை வைத்து சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் அந்நிகழ்ச்சி சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. இந்நிலையில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்பொழுது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகும் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 4வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிதாக வெளிநாட்டு நடிகையை களம் இறக்கி இருக்கின்றனர்.

அதாவது பிரஞ்சு நாட்டு மாடல் அழகியான ஆண்ட்ரியன் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார். இவர் வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழை சரளமாக பேசி வருகிறார். மேலும் சமையல் நிகழ்ச்சியிலும் கலக்கி வரும் ஆண்ட்ரியன் தொடர்ந்து இரண்டு வாரங்களாக அட்வான்டேஜ் டாஸ்க்குகளை வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் ஆண்ட்ரியன் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் இடம்பெறும் ஸ்டைல் பாடலில் ரஜினியுடன் சேர்ந்து நடனமாடி உள்ளவர் இவர் தான். இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எனக்குள் ஒருவன் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.