பொதுவாக வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் தாங்கள் அறிமுகமாகும் முதல் சீரியலிலேயே பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கு என்ன ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த திருமகள் என்ற மெகா சீரியலின் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை ஜீவிதா. இந்த சீரியலுக்கு முன் ஆபீஸ், பாசமலர் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலமடைந்த உள்ள இவர் சில திரைப்படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் கார்த்திக்கின் அக்காவாக நடித்து அசத்தியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றார்.

அந்த வகைகள் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நிலையில் அதில் ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் அவருடைய வெளிப்படையான கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது. அதாவது அவர் கூறியதாவது எனக்கு சீரியல் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க என்னிடம் சில மேனேஜர்கள் இயக்குனர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னதை பற்றி வெளிப்படையாக கூறி இருக்கிறார்கள்.
இவ்வாறு எனக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு வார்த்தைக்காக அனைத்து திரைப்படங்களையும் மிஸ் செய்துள்ளேன் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் மிஸ் பண்ணி விட்டேன் இதனால் தான் ரொம்ப கவலையான மனநிலைக்கு தள்ளப்பட்டேன் இதனை யோசித்து பலமுறை நான் கவலையை பட்டிருக்கிறேன் என மன வருத்தத்தில் பேசி உள்ளார் ஜீவிதா.