meera krishnan

நடிகை மீராவின் மகனா இவர்!! இவருக்கு இவ்வளவு திறமையா..வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இன்று வரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீரா கிருஷ்ணன். இவர் தற்பொழுது அம்மா கேரக்டர் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பாளர், பாடகி போன்ற பன்முக திறமை கொண்டவர். இவருக்கு ஆதித்யா என்ற ஒரு மகனும் உள்ளனர்.

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் கமலஹாசன் திரைப்படத்தில் பாடல் ஒன்றில் ரீமேக்கை அற்புதமாக வடிவமைத்தவர் இவர் தான். இதற்காக பல பாராட்டுக்கள் ஆதித்யாவிற்கு குவிந்தது வருகிறது.

கமலஹாசன் நடிப்பில் 1982ஆம் ஆண்டு சில்மா ஸ்பெஷல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில்  உனக்கென்ன மேலே நின்றாய் என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இப்பாடலை என்ன சிவநாதன் இசை அமைத்திருப்பார். எஸ்பிபி குரலில் வாலி வரியில் இப்பாடல் உருவானது.

இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டானது. இந்த நிலையில் இதன் ரீமேக்கை ஒரு  இசைக்குழு வெளியிடுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து பலர் ஆதித்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் நடிகை மீரா கிருஷ்ணன்  என் மகனை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று கமெண்ட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆதித்யாவின் அம்மாதான் மீராகிருஷ்ணன் என்று கூறி வருகிறார்கள்.

ramya-pandiyan-3

பூஜையுடன் தொடங்கியது ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம்!! வைரலாகும் வீடியோ..

தனது கவர்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் டம்மி பட்டாசு, ஜோக்கர்,ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் சொல்லுமளவிற்கு எந்த ஒரு படமும் பிரபலத்தை தரவில்லை.

பிறகு ரம்யா பாண்டியன் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தொடர்ந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் எளிதில் கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சி இறுதிவரை சென்றார். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த உடன் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ramyanewmovie
ramyanewmovie

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் ரம்யா பாண்டியன் கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் கிரிஸ் இசையமைக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடிகை வாணிபோஜனும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படத்தின் பூஜை சென்னையில் சிம்பிளாக நடைபெற்றுள்ளது. பூஜையில் நடிகை ரம்யா பாண்டியனும் கலந்துள்ளார். அவ்வ போது  எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

rashi-khanna

நடுக்காட்டில் கண்களுக்கு குளிர்ச்சியாக ஜிம் வொர்க் அவுட் செய்யும் ராசி கண்ணா.! வைரலாகும் வீடியோ.!

நடிகை ராசி கண்ணா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.  தெலுங்கு மட்டுமில்லாமல் ஹிந்தி, மலையாளம், தமிழ் என பல மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

தமிழில் இவர் முதன்முதலாக இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.  அதனைத் தொடர்ந்து தமிழில் அடங்கமறு அயோக்கியா, சங்கதமிழன் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

தற்பொழுது இவர் தமிழில் துக்ளக் தர்பார், அரண்மனை 3, மேதாவி,  சைத்தான் கே பச்சா,  ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இதில் ஒரு சில திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ராசிகன்னா எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை வெளியிட்டு வருவார். தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார் அதற்காக உடற்பயிற்சியும் செய்து வருவார்.

அந்த வகையில் தற்போது அடர்ந்த காட்டில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் அடர்ந்த காட்டில் கண்களுக்கு குளிர்ச்சியாக ஒர்க்அவுட் செய்கிறீர்களே என கமெண்ட் செய்துள்ளார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

sulthan

சாட்டையை சுழற்றும் கார்த்தி வைரலாகுது சுல்தான் படத்தின் டீசர்.!

நடிகர் கார்த்தி தம்பி திரைப்படத்தைத் தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதிலும் சுல்தான் திரைப்படம் தற்போது படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விரைவில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படம் மிகப்பெரிய  எதிர்பார்ப்பில் உருவாகி உள்ளது அதற்கு காரணம் இவரது சமீபத்திய படமான கைதி திரைப்படம் பெயரளவில் வரவேற்ப்பு கிடைத்ததால் சுல்தான் படத்தையும் அதே மாதிரி எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

சுல்தான் திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயகியுள்ளார். படத்தை  ட்ரீம் வாரியர் பிச்சர்  பிரகாஷ் பாபு, பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன்,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும்சண்டைக்காட்சிகள் திலீப் சுப்பராயன், இப்படத்திற்கு இசை அமைப்பாளராக விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். மற்றும் எடிட்டர் ரூபன் இத்திரைப்படத்தை எடிட் செய்துளளார்.

இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தெரியவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

 

naam

ரசிகர்களுக்காக மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் 2வில் இணைந்த நடிகை!! வைரலாகும் வீடியோ..

தற்போது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது  முன்னணி வகிக்கும் தொலைக்காட்சி விஜய் டிவி.

விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.

இந்த சீரியல் நன்றாக ஓடிக்கொண்டு இருந்த நிலையில் கொரோனா  பிரச்சினையின் காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு முற்றிலும் கதை வேறுபாடுவுடன் புதிய நடிகர்,  நடிகைகளுடன் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன்2 தொடங்கியது.

இந்நிலையில் தற்போது சீசன் ஒன்றில் நடித்து வந்த நடிகை ரேஷ்மி நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2வில் மீண்டும் நடிக்க உள்ளாராம்.

இந்த தகவலை நடிகர் செந்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

வீடியோவை பார்க்க இங்க கிளிக் செய்யவும்.

karnan

தனுஷின் கர்ணன் படம்.. ரிலீஸ் தேதி மற்றும் டீசரை வெளியிட்ட படக்குழு.! கொண்டாடும் ரசிகர்கள்.

அசுரன், பட்டாஸ் போன்ற வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் திரைப்படம் கர்ணன்.

படத்தின் ஷூட்டிங் தொடங்கியதிலிருந்து இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவல் எகிறி உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து முதன்முறையாக தனுஷுடன் இணைந்து கர்ணம் என்ற திரைப்படத்தை எடுத்து உள்ளார்.

இத்திரைப்படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் நெல்லை அருகே செட் அமைக்கப்பட்டு எடுத்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு ஷூட்டிங் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கர்ணன் படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசரை வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என தெரிய வருகிறது. இந்த டீசரை பார்த்தால் ஒரு சாதாரண மனிதன் விலங்குகளை பாதுகாத்து வருவது போல் தெரிகிறது. நிச்சயம் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என தெரியவருகிறது. இதோ கர்ணன் படத்தின் டீசர்.

rio raj

கமலிடம் சொன்னதை செய்து காட்டிய பிக்பாஸ் ரியோராஜ்.. வைரலாகும் வீடியோ.

விஜய் டிவியில் தொலைக்காட்சி யில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டு வருகிறது பிக்பாஸ்.

அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் 16 கோடிக்கு மேல் வாக்குகளை பெற்று டைட்டில் பட்டத்தை வென்றார்.

இவரை தொடர்ந்து பாலாஜி இரண்டாவது இடம், மூன்றாவதாக ரியோ ராஜ் இடம் பிடித்தார்.

வெளியில் வந்த பிரபலங்கள் பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி தற்போது பயணிக்கின்றனர் இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்த ரியோ கமலிடம் சொன்னதுபோல காட்டிற்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டதை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் கமல் நீங்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு எங்கு செல்வீர்கள் என கேட்டார். அதற்கு  தனக்கு பிடித்த பதிலைக் கூறினார்கள் அதில் ரியோ நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் காட்டிற்கு செல்வேன் என கூறினார் அதற்கு ஏற்றார் போல சில பொருள்களை கமலஹாசன் வழங்கினார்.

தற்பொழுது தனது குடும்பத்துடன் காரில் சென்று போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.