கேப்டன் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றமா.? மருத்துவர்கள் கொடுத்த விளக்கம்

Vijayakanth : திரை உலகில் எம்ஜிஆர் அடுத்து பல நலத்திட்ட உதவிகளையும் இல்லாதவர்களுக்கு உணவு காசுகளையும் கொடுத்து   அவர்களை அழகு பார்த்ததோடு மட்டுமல்லாமல் சினிமா துறையும் அடுத்த லெவலுக்கு உயர்த்தியவர் விஜயகாந்த் இவரை அனைவரும் செல்லமாக கேப்டன் என அழைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட விஜயகாந்த் ரஜினி, கமலுக்கு அடுத்து அதிக ஹிட் படங்களை கொடுத்து ஓடியவர். சினிமாவில் பேரையும், புகழையும் சம்பாதித்த இவர் ஒரு கட்டத்தில் அரசியல் பிரவேசம் கண்டார் தொடர்ந்து போராடியவர் எதிர்க்கட்சி தலைவராக அறியனை ஏறி அசத்தினார் நல்ல முன்னேற்றம் கண்டு வந்த கேப்டன் விஜயகாந்த்..

வீட்டுக்கு வந்த ரவி – ஸ்ருதி.. விஜயாவின் திட்டத்தை சுக்குநூறாக உடைத்த முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

திடீரென உடல் நல குறைவு காரணமாக ஓய்வு எடுத்தார். விசேஷ நாட்களில் மட்டுமே தன்னுடைய அரசியல் பிரமுகர் மற்றும் தன்னுடைய ரசிகர்களை பார்த்து வந்தார். சமீபத்தில் விஜயகாந்த் உடல்நிலை ரொம்ப மோசமானதால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் கேப்டன் விஜயகாந்த் உடலை பரிசோதித்த பொழுது அவர் மேலும் 14 நாட்கள் மருத்துவ மனையில் இருக்க வேண்டும் நுரையீரல் சிகிச்சை உதவி தேவைப்படுகிறது என கூறிய நிலையில் தற்பொழுது மருத்துவர்கள் கூறியுள்ளது என்னவென்றால்..

உருவாக்கியவன் நீயே திமிராய் இரு.. உண்மையும், சத்தியமும் வெல்லும்.. அமீருக்கு ஆதரவு கொடுத்த சேரன்

விஜயகாந்தின் உடல்நிலை ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது எனவும், தொடர்ந்து ஒரு நேரம் போல் மற்றொரு நேரம் அவருடைய நிலை இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் சளி அதிகமாக உள்ளதால் சுவாசத்தில் அவ்வபொழுது சிரமம் ஏற்படுகிறது தொடர்ந்து உடல்நிலை சோதனை செய்ய இடைவிடாது.

மருத்துவ குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் அவர் உடல் நலமத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு  வீட்டிற்கு வருவார் என  கூறி வருகின்றனர்.