படம் நல்லா இல்ல, நல்லா இல்ல என என்னதான் கூவுனாலும் வசூல்ல நாங்க தான் கெத்து.. இதோ கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்.

captain miller box office collection : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் இதற்கு முன்பு இவர் சாணி காயிதம் ராக்கி ஆகிய திரைப்படத்தை இயக்கியவர். இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திற்கு போட்டியாக வெளியாகியது ஆக்சன் ஜானரில் வெளியாகிய இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ஒரு சில ரசிகர்கள் கலவையான விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள்.

படத்தைப் பார்த்து வரும் ரசிகர்கள் தங்களுடைய வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் படத்தின் மேக்கிங் அற்புதமாக இருப்பதாக கூறியுள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

டைட்டில் வின்னர் என பில்டப் செய்து நொந்து நூடில்ஸ் ஆன மாயா பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.?

மேலும் ஒரு சில ரசிகர்கள் வாத்தியில் விட்டதை கேப்டன் மில்லரில் தனுஷ் பிடித்து விட்டதாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில் வசூல் விவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது. திரையரங்கில் இந்த வருட பொங்கலுக்கு நான்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளது அதில் ஒரு திரைப்படம் தான் கேப்டன் மில்லர் மற்றொன்று சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன் , விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ்.

இவை நான்கு திரைப்படங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளதால் ஒரு சில திரைப்படங்களுக்கு வசூல் குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் முதல் நாளில் 8.65  கோடி ரூபாய் வசூல் செய்து வந்ததாக தகவல் கிடைத்தது. இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா பரிசுத் தொகையுடன் மொத்தம் எத்தனை லட்சம் சம்பளமாக பெற்றார் தெரியுமா.?

முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் நெருங்கி விட்டதாக கூறப்பட்டது தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக வசூலில் கேப்டன் மில்லர்  சம்பவம் செய்யும் என கூறினார்கள். இந்த நிலையில் கேப்டன் மில்லர் இரண்டாவது நாளில் 6.65 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

இரண்டாவது நாளில் கேப்டன் மில்லர் வசூல் கணிசமாக குறைய தொடங்கியுள்ளது மொத்தத்தில் இரண்டு நாள் முடிவில் 14 இருந்து 15 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் என கருதப்படுகிறது.