பிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா பரிசுத் தொகையுடன் மொத்தம் எத்தனை லட்சம் சம்பளமாக பெற்றார் தெரியுமா.?

bigg boss tamil season 7  : கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி கிராண்ட் ஓப்பனிங்குடன் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியது இதில் விசித்ரா, பவா செல்லத்துரை, பிரதீப் ஆண்டனி, மாயா, மணி ரவீனா, வினுஷா, நிக்சன், விஜய் வருமா, விஷ்ணு, ஐசு, அக்ஷயா உதயகுமார், அனன்யா ராவ், கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், பூர்ணிமா, சரவணா விக்ரம் என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

பவா செல்லதுரை, பிரதீப் ஆண்டனி இருவருக்கும் ரெட் கார்ட் வழங்கப்பட்ட நிலையில் அதற்கு ஈடு செய்யும் விதமாக நிகழ்ச்சியில் சுவாரசியத்தை அதிகமாக ஓய்ல்டு கார்டு மூலம் உள்ளே வந்தவர் தான் அர்ச்சனா, தினேஷ்,

கானா பாலா.

நான் மட்டுமல்ல என் கணவரும் கர்ப்பம் தான்.? புகைப்படத்தை வெளியிட்டு புயலை கிளம்பிய அமலாபால்…

அதேபோல் இடையில் எவிக்ஷன் செய்யப்பட்ட அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒய்ல்ட் கார்டு மூலம் உள்ளே நுழைந்தார்கள் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது இன்று இறுதி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது டைட்டில் வின்னராக அர்ச்சனா வெற்றி பெற்றுள்ளார். பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து ஏழாவது சீசன் வரை பரிசு தொகை 50 லட்சம் மாறவே கிடையாது இந்த சீசன் வரை 50 லட்சம் தான் முதல் பரிசு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது அர்ச்சனா 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை தாக்குப் பிடித்த நிலையில் மொத்தம் 77 நாட்கள் இருந்துள்ளார். ஒரு நாளைக்கு அர்ச்சனாவுக்கு சம்பளமாக இருபதாயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.

ஐயோ டைட்டில் போச்சே.. பிக் பாஸ் டைட்டில் கிடைக்காத விரக்தியில் சூனியக்காரி மாயா போட்ட பதிவு..

அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் என்றால் 77 நாட்கள் அவருக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது பரிசுத்தொகை ஐம்பது லட்சம் ஆகையால் அர்ச்சனா தான் அதிக அமவுண்ட் தட்டி பரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.