ஆடையின்றி அமர்ந்தேன்.. அப்போ என் மனதில் தோன்றியது – மௌனம் கலைத்த பிரிகிடா சாகா..!

Brigida Saga : திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலம் அடைய முடியும் அந்த வகையில் நடிகை பிரிகிடா சாகா.. குறும்படங்களில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இயக்குனர்கள் கண்களிலும் தென்பட ஆரம்பித்தார்.

அப்படித்தான் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்த  இரவின் நிழல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து அசத்தினார் அதனைத் தொடர்ந்து ஒன்னு, இரண்டு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

குறுகிய நாட்களிலேயே வசூலில் 1000 கோடி மிரட்டிவிட்ட 5 திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்

மேலும் ரசிகர்களும் உருவாகியதால் நடிகை பிரிகிடா சாகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் இந்த நிலையில் பிரகிடா சாகா இரவின் நிழல் படத்தில் ஆடையின்றி நடித்திருப்பார். மேலும்  இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசி உள்ளார்.

நான் என்னுடைய படப்பிடிப்பின் இறுதி ஆண்டில் இருந்தேன் அப்பொழுது நடிகர் பார்த்திபன் சாரிடம் இன்டர்வியூ செய்வதற்காக துணை இயக்குனராக ஒப்பந்தமானேன். உண்மையில் இரவின் நிழல்  படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தின் ஆடிஷனில் நான் கலந்து கொள்ளவில்லை.

ஒரிஜினல் ஃபீல் வரவே இல்லை.. நேரம் பார்த்து பொன்னியின் செல்வன் படத்தை விமர்சித்த இளையராஜா!

மாறாக அந்த ஆடிஷனை கவனிக்கும் மேற்பார்வையாளராக இருந்தேன் நிறைய பேரை ஆடிஷன் செய்தோம் ஆனால் இறுதியாக இந்த கதாபாத்திரத்தை நீயே செய்து விடு என்று பார்த்திபன் சார் கூறினார். இந்த வாய்ப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை ஒரு சிங்கிள் டேக் படத்தில் இப்படியான காட்சிகள் நிறைய படத்தில் எப்படி நடிக்க போகிறோம் என்ற பயம் இருந்தது.

ஆனால் ஆடையின்றி அமர்ந்திருந்த போது எனக்குள் ஒரு பயம் ஏற்பட்டது இந்த காட்சி எப்படி வருமோ என்ற ஒரு வித உருத்தல் இருந்தது ஆனால் படத்தின் கதை அந்த காட்சிக்கு முன்னாள் இடம் பெற்ற காட்சிகள் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை என அனைத்தும் அந்த காட்சியின் என்னை பார்க்கும் பொழுது ரசிகர்களாக ஒரு வித பரிதாப உணர்வும்..

இப்படி ஒரு இப்படிப்பட்ட பொண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்து இருக்கிறது என்ற ஒரு உணர்வு தான் எழுந்தது தவிர தவறான எண்ணங்களோ கவர்ச்சியாக நடித்திருக்கிறேன் என்ற என்னம் எழவில்லை இதை நான் முன்கூட்டியே கணித்து வைத்திருந்தேன் அதேபோல் தான் நடந்தது என கூறினார்.