இந்த ஆள் கூடலாம் என்னால விளையாட முடியாது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அர்ச்சனா – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

BiggBoss 7 November 30 Promo 2 : கடந்த மாதம் மூன்றாம் தேதி 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.. ஒவ்வொரு வார இறுதியிலும்  ஒருவர் வெளியேற தற்பொழுது தினேஷ், மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விசித்ரா, நிக்சன், விக்ரம், அனன்யா, விஜய் வருமா, கூல் சுரேஷ்..

விஷ்ணு, மணிச்சந்திரா, ரவீனா, ஜோவிகா போன்ற போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.. கடந்த வாரம் பிராவோ மற்றும் அக்ஷயா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வாரம் கேப்டனாக நிக்சன் பதவி ஏற்று இருக்கிறார்.

மைக் மோகனை உருகி உருகி காதலித்த நடிகை.. உனக்காக நடிப்பையும் நிறுத்துகிறேன்..! சொன்னது யார் தெரியுமா.?

மேலும் கடந்த எபிசோடுகளில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்கு வந்து அவர்கள் நடித்திருக்கும் பார்க்கிங் பட டிரைலரை வெளியிட்டிருந்தனர்.. மேலும் நேற்றைய எபிசோடில் விஷ்ணு மற்றும் அர்ச்சனாவிற்கிடையே சில சண்டைகள் ஏற்பட்டன..

அது இன்னும் முடிவு பெறாமல் இன்று வெளியான ப்ரோமோவிலும் தொடர்ந்து உள்ளன அதாவது பிக் பாஸ் போட்டியாளர்களை ஜோடி ஜோடியாக கயிரில் கட்டி வைத்திருக்கின்றனர்.. அதில் விஷ்ணு மற்றும் அர்ச்சனா இருவரும் ஒரு ஜோடியாக இருக்கின்றனர்.. அப்பொழுது விஷ்ணு அர்ச்சனாவிடம் என்ன கேம் ப்ளான் ஓட உள்ள வந்து இருக்கீங்க என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.. பிறகு ரவீனா பிரெண்ட்ஸ் ஆயிடாதீங்க சண்டை போடுங்க..

2023 – ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாப் 10 சீரியல் நடிகைகள்..!உங்களுடைய ஃபேவரைட் யார்.?

அப்பதான் ஜாலியா இருக்கும் என்று சொல்ல அர்ச்சனா என்னோட எமோஷனல் உங்களுக்கு ஜாலியா இருக்கா என்று ரவீனாவை திட்டுகிறார் பிறகு விஷ்ணு தொன தொணன்னு ஏதாவது பேசிக் கொண்டே இருப்பதால் இந்த ஆளுகூட எல்லாம் என்னால விளையாட முடியாது என்று அர்ச்சனா கோபத்தில் கயிறு கழட்டி விட்டுப் போகும் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றன..