‘தளபதி 68’ பட வாய்ப்பை தட்டி தூக்கிய பிக் பாஸ் பிரபலம்.! 18 வருடங்களுக்குப் பிறகு விஜய் உடன் சேரும் கூட்டணி..

Thalapathy 68: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலத்திற்கு தற்பொழுது தளபதி 68 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார. இந்த படத்திற்கு தற்பொழுது வரையிலும் பெயர் வைக்காத நிலையில் தற்காலிகமாக தளபதி 68 என வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் சூட்டிங் சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக துருக்கிக்கு செல்ல படக் குழு திட்டமிட்டு உள்ளார்களாம். எனவே விரைவில் பட குழுவினர்கள் படப்பிடிப்பிற்காக துருக்கி செல்ல உள்ளனர். தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.

கப் கேக்கை தனது ஆசைக்காக பயன்படுத்திக் கொண்ட பப்லு.! நடந்த உண்மைகளை உடைத்த பிரபலம்..

இவரைத் தொடர்ந்து சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 90s ரொமான்டிக் ஹீரோவான மைக் மோகன் இந்த படத்தில் தளபதிக்கு வில்லனாக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு விஜய்யின் நண்பரான நடிகர் யுகேந்திரன் தளபதி 68ல் கமிட் ஆகியுள்ளாராம்.

அதன்படி இப்படத்தில் இவருக்கு முக்கியமான கேரக்டர் என்றும் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திருப்பாச்சி படத்தில் யுகேந்திரன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுகேந்திரன் விஜய் உடன் பகவதி உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றும் பொழுது நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதிக சொத்துகளை சேர்த்து வைத்திருக்கும் 5 வில்லன் நடிகர்.! மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்த பிரகாஷ்ராஜ்

ஆனால் சமீப காலங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகிய யுகேந்திரன் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கு பெற்றார். இதனை அடுத்து தற்பொழுது தளபதி 68 படத்தின் பட வாய்ப்பை யுகேந்திரன் கைப்பற்றியுள்ளார்.