டைட்டில் வின்னர் இவர்தான் போற போக்கில் கொளுத்தி போட்ட பூர்ணிமா.. ஆட்டம் கண்ட சக போட்டியாளர்கள்..

bigg boss season 7 tamil : பிக் பாஸ் ஏழாவது சீசன் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைந்து விடும் இந்த நிலையில் கடைசி கட்டத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது இந்த வாரம் முழுவதும் பணப்பெட்டியை யார் எடுத்துச் செல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.

முதலில் விசித்ரா தான் எடுத்து சென்றார் என கூறப்பட்ட நிலையில் திடீரென பூரணிமா 16 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார் இவரின் புத்திசாலித்தனத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டினார்கள் அதுமட்டுமில்லாமல் பூர்ணிமா வெளியேறுவதற்கு முன்பு அனைவரின் காலில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள் என கூறிவிட்டு சென்றார்.

ஐட்டம் டான்ஸ் மூலம் மூட்டையில் சம்பளம் வாங்கும் நடிகைகள்.! அடேங்கப்பா ஒரேஒரு பாட்டுக்கு இத்தனை கோடியா…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அதாவது வீட்டை விட்டு சென்ற பூர்ணிமா மேடைக்கு வந்துள்ளார் அப்பொழுது அவரிடம் கமல் உங்கள் நண்பர்கள் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என கேட்டுள்ளார் உடனே மாயாவிடம் சும்மா வீட்டுக்கு வந்தா துரத்தி துரத்தி அடிப்பேன் என கூறினார்.

அதற்கு காரணம் எப்படியாவது டைட்டிலை வென்றுவிடு என சிக்னல் கொடுத்துள்ளார் இப்படி ஒவ்வொருத்தரையும் பற்றியும் அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என கூறி பெரும்ம் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

கருப்பு கலர் கூலிங் கிளாஸ் போட்டா உன்ன கண்டுபிடிக்க முடியாதா.? விமான நிலையத்தில் வடிவேலுவை நேருக்கு நேர் பார்த்த விஜயகாந்த்!

பூர்ணிமா கூறியதும் வீட்டுக்குள் இருந்த சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது அவரவர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை ஆனால் அர்ச்சனா இது தெரிந்தும் தெரியாதது போல் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். பூர்ணிமா பற்ற வைத்த நெருப்பு எப்படி பற்றி எறிய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.