பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவித்தவுடன் படக்குழு வெளியிட்ட மாஸான புகைப்படம்.!

bigg boss tamil season 7 archana movie poster : விஜய் டிவியில் சில நாட்களுக்கு முன்பதாக பிக் பாஸ் சீசன் 7 நடந்து முடிந்தது இந்த சீசனில் அர்ச்சனா தான் வெற்றி பெற்றார். இது அனைவருக்கும் தெரிந்தது. இவர் பிரதீப் ஆண்டனிக்கு சப்போர்ட்டாக பேசி புள்ளி கேங்க்கை எதிர்த்து நின்றார் அதனாலேயே மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றார்.

அது மட்டுமல்லாமல் புள்ளி கேங் மொத்தமாக இவரை தாக்கினர் ஆனால் இவர் ஒரே ஆளாக நின்று அவர்கள் அனைவரையும் எதிர்த்தார் என்பதே இவர் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நான் டைட்டில் வின்னர் கிடையாது.. பிக்பாஸ் வீட்டில் இவருக்கு நடந்தது அநியாயம்.! அணுகுண்டை வீசிய அர்ச்சனா

பிக் பாஸ்க்கு வருவதற்கு முன்பே பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த வகையில் இவர் டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பிக் பாஸில் அர்ச்சனா வெற்றி பெற்ற உடனே அடுத்த சில நிமிடங்களிலேயே டிமான்டி காலனி 2 பட குழுவினர் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

டிமான்டி காலனி 2 பட குழுவினர் அர்ச்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளனர்.
இந்த திரைப்படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி, கோவிந்தராஜன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

captain miller box office : படும் அடியாக சரிந்த கேப்டன் மில்லரின் வசூல்.! 4 வது நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா.?

இந்த படம் சாம் சி எஸ் இசையில், ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவில், குமரேஷ் படத்தொகுப்பில் உருவாகி யுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் அர்ச்சனா நடித்துள்ளதால் அவருக்காக ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பார்ப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த படம் முதல் பாகத்தை போன்று வெற்றியடைய அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.