சூனியக்காரி மாயாவை வெளுத்துவிட்ட கமல்.! அப்புறம் என்னா ஜோவிகாவுக்கு லெஃப்ட் அண்ட் ரைட் தான்.! சரியான சாட்டையடிதான்

Bigg Boss season 7 Tamil today promo 4: வாரம் தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் எபிசோடுக்காக ரசிகர்கள் காத்து வருவது வழக்கம். ரசிகர்களின் மனதில் இருக்கும் ஏராளமான கேள்விகளை கமல் போட்டியாளர்களிடம் கேட்டு அதற்கான தீர்வை வழங்கி வருகிறார். அப்படி இதுவரையிலும் இல்லாத அளவிற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இந்த வார கமல் எபிசோடுக்காக காத்து வந்தனர்.

அதாவது பிரதீப்பிற்கு இந்த வாரம் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட நிலையில் இதனை அடுத்து இந்த வார கேப்டனாக இருந்த மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் போன்றவர்களிடம் மிகவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

Bully gang – யை வச்சு செய்யும் விசித்ரா.! ரெக்கார்ட் நிறைய இருக்கு குறும்படம் போட்டு காட்டிய கமல்..

அடிப்படைத் தேவையாக இருக்கும் பொருட்களில் இருந்து, சமைத்து தரும் வேலை என அனைத்திலும் படாத பாடுபடுத்தினார். எனவே விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் மூன்று பேரும் மாயா பூர்ணிமாவின் ஏஜென்ட் டீமுக்கு எதிராக வாக்குவாதம் செய்து வந்தனர். அதோடு மட்டுமல்லாமல் ஏஜென்ட் டீமில் இருக்கும் ஐஷூ, ஜோவிகா இவர்களுடைய ஆட்டமும் கொஞ்சம் ஓவராகவே இருந்தது.

எனவே இதனால் கமல்ஹாசன் கண்டிப்பாக இதனை தட்டிக் கேட்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் மூன்று ப்ரோமோக்களிலும் மாயா பூர்ணிமாவின் ஏஜென்ட் டீமை வெளுத்து வாங்கினார் இதனை அடுத்து தற்போது 4வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

விசித்ரா மேடம் மாயா கேப்டன்ஷியில் டூத் பிரஸ் கூட மறுக்கப்பட்டது என சொல்ல அதற்கு கமல் மாயா டூத் பிரஸ் என்பது பேசிக் நீட் இல்லையா? ப்ருஸுக்கு இன்னொரு ஆல்ட்ரநேட்டிவ் சொன்னிங்களே நீங்க என தனது விரலை தூக்கி காமிக்கிறார். டீ ஏன் இப்படி நீங்க குடிச்சிக்கங்க என கையால சொல்லி இருந்தா?

உங்களுக்கு என்ன மாலைக்கண்ணா? சூனியக்காரி மாயாவின் ஏஜென்ட் டீமை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்… அரங்கையே அதிர வைக்கும் ரசிகர்களின் ஓசை

இதனை அடுத்து விசித்ரா அப்புறம் அவங்களோட பாடி லாங்குவேஜ் சார் எனக்கூறி அவர்கள் செய்த அனைத்தையும் செய்து காட்டுகிறார். அதே போல் அர்ச்சனாவும் டாஸ்க் அப்போ செய்த பாடி லாங்குவேஜ் செய்து காண்பிக்க உடனே மூளையே யூஸ் பண்ணலன்னு சொல்லலாமா சார் என ஜோவிகா கேட்டு கண்கலங்கி  சீன் போடுகிறார். இதற்கு ஜோவிகா நீங்க கீழ இருந்து மூளை எடுத்து காமிக்கிறீங்களே அப்பனா அது என விசித்ரா கேட்கிறார்.