சண்டையை மூட்டி விட புதிய டாஸ்க்கை அறிமுகம் செய்த பிக் பாஸ்.. விசித்ராவுக்கு கிடைத்த எதிரி லட்டுகள்.! கடைசியில் அடித்த அதிர்ஷ்டம்..

Bigg Boss season 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஐஷூ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த வாரம் பூர்ணிமா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் கேப்டன் மாயாவுடன் சேர்ந்து கொண்டு ஏஜென்ட் டீம் மிகவும் ஆட்டம் போட்டு வந்தனர்.

இதனால் கடுப்பான ரசிகர்கள் ஏஜென்ட் டீமில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளார்கள். அப்படி ஐஷூ முதற்கட்டமாக வெளியேறிய நிலையில் அடுத்தது பூர்ணிமா தான் வெளியேற வேண்டும் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

மாயா பூர்ணிமாவின் ஏஜென்ட் டீம் செய்த தவறுகளை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்திருந்தார். இப்பொழுதும் புரிந்து கொள்ளாத பூரணிமா தவறு செய்தது விசித்ரா, அர்ச்சனா தான் கமல் கேள்வி கேட்கலைன்னா அவங்க மேல தப்பு இல்லன்னு ஆயிடுமா என்று பேசி வருகிறார்.

முதன்முறையாக டூ பிஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.! உங்க திருமுகத்தை ஒரு பக்கமா திருப்புங்கோ எனக் கூறிய நெட்டிசன்கள்..

இவ்வாறு இவ்வளவு நடந்த பிறகும் பூர்ணிமா தனது தவறை உணராமல் இருந்து வருகிறார். இதனை அடுத்து இன்று டாஸ்க்கில் தோற்றதால் பெரிய பெட்ரூமில் இருக்க முடியாது என பிக் பாஸ் அறிவித்துள்ளார். மேலும் தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய 2வது ப்ரோமோவில் லட்டுகள் அனுப்பப்பட்டு நண்பராக நினைப்பவர்களுக்கும் எதிரியாக நினைப்பவர்களுக்கும் தர சொல்கின்றனர்.

அப்படி முதலில் நண்பராக இருப்பவர்களுக்கு தருகின்றனர் அர்ச்சனா லைஃப்லயே முதல் தடவை எனக்காக ஒருத்தவங்க நின்னாங்க எனக்கூறி விசித்ராவுக்கு தருகிறார். பிறகு பூர்ணிமா இந்த வாரம் உங்களுடன் நல்ல நட்பை எதிர்பார்க்கிறேன் என சொல்லி அர்ச்சனாவிற்கு தருகிறார்.

பூர்ணிமா, நிக்சனால் ஹவுஸ் மேட்ஸ்களை பெட்ரூமில் இருந்து துரத்தி விட்ட பிக் பாஸ்.. கதறும் கூல் சுரேஷ்

பிறகு எதிரியாக நினைப்பவர்களுக்கும் தர வேண்டும் என சொல்ல முதலில் மாயா விஷ்ணுவுக்கும், அர்ச்சனா பூர்ணிமாவுக்கும், மணி தினேஷுக்கும், தினேஷ் பூர்ணிமாவுக்கும், நிக்சன் மணிக்கும், விசித்ரா ஜோதிகாவுக்கும் பிறகு விசித்ராவுக்கு ஜோவிகா, கூல் சுரேஷ், விஷ்ணு, பூர்ணிமா போன்றவர்களும் உள்ளனர். இந்த லட்டுக்களில் ஒரு ட்விஸ்ட் மறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி விசித்ரா வைத்திருந்த லட்டில் ஒரு ஸ்டார் இருப்பது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.