இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. சிக்குமா சூனியக்காரி டீம்

Bigg Boss season 7 Tamil today promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எனவே ரசிகர்கள் பிரதீப்பிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் மேலும் கமலஹாசன் தீர விசாரிக்க வேண்டும் என கூறினார்கள். அதோட மட்டுமல்லாமல் கடந்த வார கேப்டனாக இருந்த மாயா தொடர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் ஆகியோர்களுக்கு எதிராக பல விஷயங்களை செய்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த 2 குக் வித் கோமாளி பிரபலங்கள்.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

இவ்வாறு மாயா மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து கொண்டு இவருடைய ஏஜென்ட் டீமும் பல வேலைகளை பார்த்தனர். எனவே அனைவருக்கும் கமல் இந்த வாரம் ஏஜென்ட் டீமுக்கு அதிரடி காமித்தார்.  ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் ஆனால் மக்கள் கைதட்டுதலை வைத்து ஏஜென்ட் டீம் ஆடிப் போய் உள்ளனர்.

மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற ஐஷூ நேற்று வெளியேறினார் இந்த வாரம் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வார கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனை அடுத்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது.

2024ல் கப்பு முக்கியம் பிகிலு.. நேரம் பார்த்து அடித்த விஜய்.! வேட்டை ஆரம்பம்

அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய 2வது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற இரண்டு நபர்களை சரியான காரணத்துடன் நாமினேஷன் செய்ய வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார். மிகவும் போர் கண்டஸ்டண்ட் எனக் கூறி முதலில் விக்ரம் நாமினேஷன் ஆகிறார். இவரை தொடர்ந்து ப்ராவோ, அக்ஷயா, விசித்ரா, மணி மற்றும் பூர்ணிமா ஆகியோர்களும் இந்த வார நாமினேஷனில் சிக்கிவுள்ளனர்.