ஐஷூ வெளில போனதே உன்னால் தான்.. விசித்ரா, அர்ச்சனா உடன் வாக்குவாதத்தில் நிக்சன்

Bigg Boss season 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது மீண்டும் சண்டை ஆரம்பித்துள்ளது. அதாவது கடந்த வாரம் கேப்டனாக இருந்த மாயா சரியாக தனது தலைமை பொறுப்பை செய்யாத காரணத்தினால் வீட்டில் பல குளறுபடிகள் நடந்தது.

எனவே டார்கெட் செய்து ஒவ்வொரு ஆளாக வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வந்தனர் கமல்ஹாசனும் மாயாவின் கேப்டன்சியை கழுவி ஊற்றினார். இதனால் கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று ஏஜென்ட் டீமில் இருந்த ஐஷு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

விஜயின் தாய் மாமன் யார் தெரியுமா.? அட இவரும் சினிமா பிரபலமா..

பிக் பாஸ் சீசன் 7 காதல் ஜோடிகளாக ஐஷூ-நிக்சன் இருந்து வந்த நிலையில் இருவரும் எப்பொழுதும் ஒன்றாக சுற்றுவதையே வழக்கமாக வைத்திருந்தனர். அதோட மட்டுமல்லாமல் ஒரே தட்டில் சாப்பிடுவது, மாறி மாறி ஊட்டி கொள்வது, கண்ணாடி முன்பு முத்தம் கொடுத்து கொள்வது, அனைவரும் முன்பும் ஐஷூவை நிக்சன் தூக்கி செல்வது என பல வேலைகளை பார்த்து வந்ததால் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று ஐஷூ வெளியேற்றப்பட்டார்.

இதனால் நிக்சன் மிகவும் டவுன் ஆக இந்த வாரம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் ஐஷூ உடைய பிரச்சனை பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்துள்ளது. அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய முதல் ப்ரோமோவில் நானும் ஐஷூவும் பேசுறது தப்புனா மணி-ரவீனா பேசுறது தப்பு விஷ்ணுவும் பூர்ணிமாவும் பேசுறது தப்பு என்று நிக்சன் விசித்ராவிடம் கூறுகிறார்.

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் பீச்சில் நிர்வாணமாக ஓடுவேன்.. பிரபல நடிகை போட்ட அதிரடி பதிவு..

அப்பொழுது விசித்ரா மரியாதை தருமாறு கூற நீங்க ரெஸ்பெக்ட் கொடுங்க நானும் ரெஸ்பெக்ட் கொடுக்கிறேன் நீங்க யாரா வேணாலும் இருந்துட்டு போங்க என்ற சொல்லிவிட்டு அர்ச்சனா கெட்டுப் போறதுக்கு காரணமே நீங்கதான் என்றும் கூறுகிறார்.

இதற்கு அர்ச்சனா நான் என்ன கெட்டுப் போயிட்டேன்னு நீங்க பார்த்தீங்க என்று கேட்க அதற்கு நான் உங்களிடம் பேசவே இல்லை என்று கூற இதற்கு மீண்டும் அர்ச்சனா என் பேரு எடுத்தது நீங்க தான் என சொல்ல இதற்கு நிக்சன் இல்ல இல்ல அதனால ஐஷூ வெளில பொய்டானு சொன்னீங்க என்று சொல்ல இதற்கு அர்ச்சனா 40 நாளா ஐஷூ எதுவுமே பண்ணாம இருந்ததுக்கு காரணம் நிக்சன் கூட இருந்ததுதானே எல்லாரும் ஒரு நாள் எலிமினேட் ஆகி போவாங்க என சொல்ல கண்டிப்பா போவாங்க என்று நிச்சயம் சொல்கிறார். அப்பனா போய் பாத்துக்கோ என்று அர்ச்சனா கூறி விடுகிறார்.