ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை கிழித்து தொங்க விட்ட அர்சன்னா, விசித்ரா.! குரூப் டிஸ்கஷன் தெரியுது பிக் பாஸ் கொடுத்த அதிர்ச்சி

Bigg Boss season 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதை உணர்த்தும் வகையில் ஏராளமான ட்டுஸ்டுகள் இருந்து வருகிறது. அப்படி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களும் ஒன்றிணைந்து ஒருவரை டார்கெட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் வைல்ட் கார்டு போட்டியாளர்களை தாக்கிய இவர்கள் தற்பொழுது பிரதீப்பிற்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பி வைத்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் பிரதீப் ஸ்கூல் சுரேஷ் கிடையே பிரச்சனை ஏற்பட்டது.

முதல்முறையாக ஐஸ்வர்யாவின் ஆசையை நிறைவேற்றும் கௌதம்.. ஆட்டத்தை ஆரம்பித்த சித்ரா தேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

எனவே இதனை வைத்து ஒட்டுமொத்த பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்ககள் ஒன்றாக சேர்ந்து பிரதீப்பை ரெட் கார்டு மூலம் வெளியில் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிரதீப்பை தொடர்ந்து மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற வைல்ட் கார்டு என்ட்ரிர்அன்ன பாரதியும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து அனுப்பி வைத்தது மிகவும் தவறு என ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா, அர்ச்சனா பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களிடம் கூறுகின்றனர். அது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது விசித்ரா ஸ்கூல் சுரேஷ் விஷயத்தை வைத்து பிரதீப்பை துரத்தி விட்டுட்டீங்க அப்படிதான் சொல்வேன் என கூறுகிறார்.

கடை பணத்திலிருந்து 1000 ரூபாய் திருடிய செந்தில்.. இது தெரியாமல் கதிரை அடித்த அப்பா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்..

பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களிடம் பிக் பாஸ்  நாமினேஷன் பிராசஸ் முடிவுகள் நடந்த ரெட் கார்டு எவிக்சன் குரூப் ஆக்டிவிட்டியா தெரிகிறது எனக் கூற பூர்ணிமா அதிர்ச்சடைகிறார். பிறகு விசித்ரா பேசிக் கொண்டிருப்பதை கேட்டு விட்டு இது மிகவும் கேவலமா தெரியுது என மாயா திமிர் ஆக சொல்கிறார். அர்ச்சனா பூர்ணிமாவிடம் மனசாட்சி பிரகாரம் இதனை யூஸ் பண்ணி இருந்தா பிரச்சனை இல்ல அப்படி இல்லனா நீ யாரோ ஒருத்தங்களோட வாழ்க்கையை பாழாக்குற எனக் கூற அதிர்ச்சடைகிறார்.