மிச்சர் சாப்பிட்டுக்கொண்டு இருந்ததற்கு இத்தனை லட்சமா.? வெளியேறிய யுகேந்திரன், வினுஷா வாங்கிய சம்பளம்…

Bigg Boss season 7: எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல்ஹாசன் அடிக்கடி கூறும் இந்த வார்த்தைகள் இந்த வாரம் உண்மையாகி இருக்கிறது என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் இதற்கு மேல் சரியாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வாரம் தோறும் ஞாயிறு கிழமை அன்று நாமினேஷனில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் வெளியேறுவது வழக்கம் அப்படி இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகிய இருவரும் எலிமினேட் ஆகியுள்ளனர்.

இந்த வாரம் ஐந்து பேர் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள் எனவே மொத்தம் 19 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் வந்த அடுத்த நாளே வைல்ட் கார்டு போட்டியாளர்களை ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் கேப்டன் பூர்ணிமா.

பூர்ணிமாவை தொடர்ந்து வைல்ட் கார்டு போட்டியாளர்களை அவமானப்படுத்தும் மாயா.! முதல் நாளே கதறி அழும் அர்ச்சனா..

எனவே ஸ்மால் பாஸ் மற்றும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு இடையே தொடர்ந்து சண்டை சச்சரவுகள் இருக்கும் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதற்கு மேல் மொத்தமாக பிக் பாஸ் சீசன் 7 வேற லெவல் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவலின்படி 28 நாள் மிச்சர் சாப்பிட்டுக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருந்த வினுஷா, கேப்டன் பதவியை சரியாக பயன்படுத்தவில்லையே என்ற கவலையுடன் வெளியேறிய யுகேந்திரன் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

பிரேமம் பட இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா? சினிமாவில் இருந்து விலக காரணம் இதுதான்..

அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வினுஷா தேவி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. சும்மாவே இருந்து கொண்டு வீட்டு வேலையை பார்த்துகிட்டு இருந்த இவருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 20000 சம்பளம் பேசப்பட்டதாம். அதன்படி 28 நாளைக்கும் வினுஷாவிற்கு 5 லட்சத்து 60 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும் நடிகருமான யுகேந்திரன் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு நாளைக்கு 27 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார். அதன்படி 28 நாளைக்கும் யுகேந்திரன் 7 லட்சத்து 56 ஆயிரம் மொத்தமாக சம்பளமாக பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.