நிக்சன் உடன் ரொமான்ஸ் பண்ணதுக்கு இத்தனை லட்சமா? 42 நாட்களுக்கு ஐஷூ வாங்கிய சம்பளம்

Bigg Boss Ashu Salary: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில்  ஞாயிறு கிழமை ஆனா நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐஷூ வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, கூல் சுரேஷ், விசித்ரா, கானா பாலா, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ், ஆர்.ஜே பிராவோ, அக்ஷயா, விஷ்ணு விஜய் உள்ளிட்ட போட்டியாளர்களுடன் 7வது வாரத்தை எட்டிவுள்ளது.

கதறி அழும் பூர்ணிமா.. இவ்வளவு பட்ட பிறகும் தவறை உணராத சூனியக்காரி.!

வாரம்தோறும் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். அப்படி ரசிகர்கள் இந்த வாரம் மிகவும் எதிர்பார்த்து வந்த மாயாவின் ஏஜென்ட் டீமை கமல்ஹாசன் வெளுத்து வாங்கினார். இதனை அடுத்து இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று ஐஷூ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

திறமையான பெண்ணாக இருந்தாலும் ஐஷூ நிக்சனுடன் சுற்றி வந்தார் மேலும் இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாற பிக் பாஸ் வீட்டில் கண்ணாடி முன் நின்று முத்தம் கொடுத்து கொள்வத,  இரட்டை அர்த்தங்களில் பேசுவது, ஒரே தட்டில் சாப்பிடுவது, கூட்டிக் கொள்வது என ஏராளமான சில்மிஷன் வேலைகளை செய்து வந்ததால் ஐஷூவிற்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு குறைந்தது.

கிழிந்த பேண்டில் வித்தியாசமான தீபாவளி போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ஜெனி.! அணுகுண்டோட அசால்ட் பண்றாங்களே..

இந்நிலையில் 42 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஐஷூ வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. ஐஷூவிற்கு ஒரு நாளைக்கு ரூபாய் 20000 சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் இவருக்கு ஜிஎஸ்டி போக சுமார் 8 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் ரொமான்ஸ் பண்ணதுக்கு 8 லட்சம் சம்பளமா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.