கிழிந்த பேண்டில் வித்தியாசமான தீபாவளி போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ஜெனி.! அணுகுண்டோட அசால்ட் பண்றாங்களே..

Actress Divya Ganesh: தமிழ் திரைவுலகை பொருத்தவரை வெள்ளித்திரை நடிகர் நடிகைகளை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுவாக வெள்ளித்திரை பிரபலங்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தால் மட்டுமே அவர்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தை பிடிக்க முடியும்.

ஆனால் சின்னத்திரை பொருத்தவரை இதில் நடிக்கும் எந்த பிரபலமாக இருந்தாலும் ஒரு சீரியலில் நடித்தாலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விடுகின்றனர். எனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு சின்னத்திரை மிகவும் எளிமையான வழியாக இருக்கிறது அப்படி ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரை நடிகைகளுக்கு இருக்கும் மவுசும் அதிகம்.

அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சின்னத்திரை நடிகை தான் திவ்யா கணேஷ். ஆரம்ப காலகட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். இந்த நாடகம் பெரிய அளவில் பிரபலத்தை தர தொடர்ந்து அடுத்தடுத்த தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

divya ganesh 2
divya ganesh 2

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு மற்றும் சுமங்கலி போன்ற சீரியல்களில் நடித்து வந்த திவ்யா கணேஷ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் இவருடைய கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

divya ganesh
divya ganesh

இந்நிலையில் தற்போது திவ்யா கணேஷ் தீபாவளி திருநாள் அன்று வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அப்படி கிழிந்த பேண்டில் மாடர்ன் லுக்கில் பட்டாசுகளை வைத்து இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

divya ganesh
divya ganesh