பிரதீப் ஆண்டனியின் Girl Friend இவர்தான்.. ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பிரபலம்

Bigg Boss Pradeep Girlfriend: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனியின் Girl Friend புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் அறிமுகமாகி தற்பொழுது வரையிலும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இருந்து சிலர் வெளியேறி 5 பேர் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சில போட்டியாளர்கள் பிரதீப் பேசும் கெட்ட வார்த்தைகள் ,பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அவர் இருப்பதனால் பயமாக இருப்பதாகவும் கமலிடம் கோரிக்கை வைத்து முடிவு செய்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

என்கிட்ட இருக்கிற கடைசி ஆயுதம் இதுதான்.. பணத்திற்காக காட்ட கூடாததை காட்டி நடித்த 5 நடிகைகள்.!

டைட்டில் வின்னர் ஆக கூடிய பிரதீப்பிற்கு இவ்வாறு நடந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதோட மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பிரதீப்பிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். எனவே இதனால் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் பிரதீப் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிரதீப் இதற்கும் மேல் பிக் பாஸ் வீட்டிற்கு வர மாட்டார் என கமல் தெரிவித்தார். ரெட் கார்டு கொடுத்தாலும் மக்கள் மத்தியில் இருக்கும் அதிக ஆதரவால் பட வாய்ப்புகள் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

bigg boss pradeep
bigg boss pradeep

சமீபத்தில் பிக் பாஸ் பிரபலம் சுரேஷ் சக்கரவர்த்தி நேரலையில் கலந்துக் கொண்டார். அப்பொழுது சுரேஷ் சக்கரவர்த்தி இவர்தான் பிரதீப் ஆண்டனியின் Girl Friend என அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.