பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு பரிசுத்தொகை சம்பளத்தை தாண்டி அடித்த ஜாக்பாட்..

bigg boss 7 title winner archana : பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை கொடுப்பது வழக்கம்தான் அந்த வகையில் இந்த ஏழாவது சீசனில் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டவர் பிக் பாஸ் அர்ச்சனா. அதேபோல் ஒவ்வொரு சீசனிலும் கடைசி வரை பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் கையை உயர்த்துவதற்கு முன்பு கமலஹாசன் சில வேடிக்கைகளை காட்டுவார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக பைனல் ரெண்டு போட்டியாளர்களை பதற வைத்துள்ளார் அவர்களும் கையை விட்டுவிட்டு நான் போய் கேட்டுவிட்டு வருகிறேன் என செல்லும் அளவிற்கு டோஸ் கொடுத்தார். கடைசியாக மணி மற்றும் அர்ச்சனா கையைப் பிடித்துக் கொண்டு நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு இதயத்தை படபடப்பாக வைத்திருந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் காதலை மலர வைத்த மணி சந்திரா எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.?

கடைசி நேரத்தில் அர்ச்சனாவின் கையை தூக்கி டைட்டில் வின்னர் அர்ச்சனா என்று அறிவித்து விட்டார். கையை தூக்கி அர்ச்சனா டைட்டில் வின்னர் என அறிவித்ததும் அர்ச்சனா வானத்துக்கும் பூமிக்கும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார் இவருக்கு பரிசுத்தொகை மட்டுமல்லாமல் சில பரிசுகளும் ஆஃபர் ஆக கிடைத்துள்ளது.

அந்த வகையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் பிக் பாஸ் செவன் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு 15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை பரிசாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மேலும் ஒவ்வொரு முறையும் எவிக்ட் ஆகும் போட்டியாளர்கள் வெளியே செல்லும் பொழுது vitara car ல் தான் செல்வார்கள் அந்த வகையில் அந்த கார் நிறுவனத்தில் இருந்து புதிய பிராண்ட் நியூ காரை ஒன்றை பரிசாக அர்ச்சனாவிற்கு வழங்கியுள்ளார்கள்.

பிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா பரிசுத் தொகையுடன் மொத்தம் எத்தனை லட்சம் சம்பளமாக பெற்றார் தெரியுமா.?

50 லட்சம் பரிசு போக நிலம், கார் என பம்பர் பரிசாக அர்ச்சனாவுக்கு அள்ளி கொடுத்துள்ளார்கள்.