இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவரா.? அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.

biggboss 7 : பிக் பாஸ் ஏழாவது சீசன் 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் கூல் சுரேஷ் வெளியான பொழுது இனிமேல் பிக் பாஸை பலரும் பார்க்க மாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க ஃப்ரீஸ் டாஸ்க் வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் மீண்டும் பிக் பாஸ் கவர்ந்து இழுத்தது.

இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு குடும்பத்தின் உறவினர்கள் உள்ளே வந்து பார்த்துவிட்டு சென்றார்கள் இந்த நிலையில் ரவீனாவின் உறவினர்கள் வந்து மணியை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள் ஆனால் ரவீனாவை பற்றி எதுவுமே சொல்லவில்லை இந்த நிலையில் ரவீனா உறவினர்களை ரசிகர்கள் வசை பாடினார்கள்.

புது மருமகளுக்காக ரோகினியை வேலை வாங்கும் விஜயா.. எல்லாம் காசு பண்ற வேலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

மேலும் நிக்சன் இன் அப்பா உள்ளே வந்து நிக்சனை கழுவி கழுவி ஊற்றினார் அப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் எவிக்சன் யாரென்று ஏற்கனவே அறிவித்து விட்டார்கள் ரவீனா, விக்ரம் விசித்ரா ஆகிய மூன்று பேர் மட்டும் தான் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார்கள்.

அதேபோல் பிக் பாஸ் ஏழாவது சீசன் அதிக மன உளைச்சலை தருவதாகவும் சீக்கிரம் இந்த சீசனை முடித்து விட வேண்டும் எனவும் கமலுக்கு ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள் இந்த நிலையில் அதிக ஓட்டிங்கில் விசித்திரா இருப்பதால் கண்டிப்பாக விசித்திர வெளியேற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழுந்து கிடந்த பிரபாஸை தூக்கி விட்டதா சலார்… இதோ திரை விமர்சனம்.!

அதே போல் ரவீனாவை காட்டிலும் விக்ரமுக்கு குறைந்த வாக்குகள் இருக்கிறது அதனால் இந்த வாரம் விக்ரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விக்ரம் பெரிதாக கண்டன்ட் கொடுக்க மாட்டார் அதனால் விக்கிரமுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.