விஷ்ணு மீது அன்பை பொழியும் பூர்ணிமா.. ரச்சிதா குறித்து பேசி எமோஷ்னலான தினேஷ்

Bigg Boss 7 Tamil today promo 3: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க்கள் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி கடந்த சில தினங்களாக டான்ஸ் மாரத்தான் நடைபெற்றது இதில் அர்ச்சனா, தினேஷ் வெற்றி பெற்றனர்.

இந்த டாஸ்க் கிராண்ட் ஃபினாலே செல்வதற்கான முதல் டாஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட் ஃபினாலே அர்ச்சனா செல்ல முடியாத காரணத்தினால் தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை பூர்ணிமாவிற்கு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேறி உள்ளார்.

சிவகார்த்திகேயனை சுழன்று சுழன்று அடிக்கும் கர்மா.! கடைசி நேரத்துல இப்படி ஆகிடுச்சே..

இன்று 75 நாட்களை கடந்திருக்கும் நிலையில் இதனை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் யார் மீது தனக்கு கோவம் இருந்ததோ அது எல்லாம் போய் தற்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதாக தங்களுக்கு பிடித்த நபர்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது வெளியாக இருக்கும் இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் விஷ்ணு எனக்கு ஃபிரண்டா இருப்பாரு அப்புறம் எப்பவாவது எனக்கு ஆப்பு வைப்பாரு நேத்து எங்க நின்னு அழுதப்போ அவர் மேல இருந்த கொஞ்சம் நஞ்ச கோபமும் மொத்தமா போயிடுச்சு என கூறுகிறார்.

வாழ்க்கை ஒரு வட்டம் டா.! இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்.! இந்த வார TRP-யில் மண்ணை கவ்விய ரசிகரக்ளின் ஃபேவர்ட் சீரியல்கள்..

பிறகு இவரை அடுத்து தினேஷ் கடந்த 6வது சீசன் எனக்கு ரொம்பவும் கனெக்டட் ஆன சீசன் அதுல ஒரு சின்ன எமோஷன் இருக்கு. அதை பத்தி பேசணும் டோட்டலா நான் ட்ரெயின் அவுட் ஆயிடுவேன் எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடந்தது. இதுல இருந்து ஒரு டேர்னிங் பாயிண்டா பிபி 7 இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை என கூறியுள்ளார்.