டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை இழந்த அர்ச்சனா.! கூடவே இருந்து இப்படி பண்ணிட்டாரே..

Bigg Boss 7 Tamil today promo 3: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 20 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் திட்டம் போட்டு சிலர் அர்ச்சனா, விஜய் வர்மாவை பழிவாங்கியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் தற்போது மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. தப்பு செய்யும் போட்டியாளர்களை சரியாக கண்டிக்காமல் இருந்து வரும் கமலை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

அர்ஜுனின் புதிய கெட்டப்.. ஒருவேளை விடாமுயற்சி திரைப்படத்திற்காகவா.? வைரலாகும் புகைப்படம்..

வாரத்தின் இறுதி நாட்கள் ஆனா சனி, ஞாயிறு கமல் எபிசோடுக்காக ரசிகர்கள் காத்து வருவது வழக்கம் ஆனால் சமீப காலங்களாக கமல் வந்தாலே அதனை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவிற்கு எதிராக சிலர் சண்டை போட்டு வருவதனால் கமல் அர்ச்சனாவை எச்சரித்துள்ளார்.

தற்பொழுது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது அதில் திடீரென இரண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த டாஸ்கிளிருந்து வெளியேற்ற வேண்டும் என பிக் பாஸ் தெரிவிக்கிறார். அதன்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஷ்ணு விக்ரமை கூற, தினேஷ் அர்ச்சனாவை சொல்கிறார்.

100 நாட்கள் ஓடிய ரஜினியின் முதல் திரைப்படம் எது தெரியுமா.? அதனாலதான் இவர் சூப்பர் ஸ்டார்..

அர்ச்சனா குறித்து தினேஷ் கூறும் பொழுது டிக்கெட் டூ பினாலே  மதிப்பு என்ன என்பது தெரியுமா என்பது எனக்கு தெரியவில்லை அதனால் நான் அர்ச்சனாவை தேர்வு செய்கிறேன் என கூறுகிறார். பிறகு பெரும்பாலான போட்டியாளர்களின் கருத்துப்படி விஜய் வர்மா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் டிக்கெட் டூ பினாலேவுக்கு செல்லும் வாய்ப்பை கிடைக்கின்றனர்.

இது குறித்து அர்ச்சனா விசித்ராவிடம் தினேஷ் கூறிய காரணம் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையிலேயே தினேஷ் எனக்கு ரொம்ப க்ளோஸ் அவர் கூடவே இருந்து அண்ணா அண்ணா என்று பேசி இருக்கிறேன் என கூறுகிறார் இதனால் தினேஷ் மற்றும் அர்ச்சனாவிற்கிடையே சண்டை ஏற்பட உள்ளது.