மரியாதையா பேசு, போடா.! லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய அர்ச்சனா.. உண்மையை சொன்னதால் கொந்தளிக்கும் நிக்சன்

Bigg Boss 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பல விறுவிறுப்பான டாஸ்க்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் நிக்சன் மற்றும் அர்ச்சனாவிற்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பொதுவாக நிக்சன் மரியாதை குறைவாக பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். எனவே இதனால் பலமுறை பிரச்சனை வந்திருக்கும் நிலையில் இவருக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் அர்ச்சனா பேசியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் முதல் நாளில் இருந்து தொடர்ந்து சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. குறிப்பாக அர்ச்சனா, தினேஷ், பிராவோ என வைல்ட் கார்டில் ஐந்து பேர் என்ட்ரி கொடுத்தனர். அதன் பிறகு தான் பார்வையாளர்களை மத்தியில் அதிக கவனம் ஈர்த்தது.

விஜயகாந்தின் 25, 50, 75, 100 – வது படங்கள் வெற்றி அடைந்ததா.? படத்தின் பெயர் என்ன தெரியுமா.?

மேலும் சூனியக்காரி ஏஜென்ட் டீமான மாயாவின் கேங் சேர்ந்து அர்ச்சனாவிடம் சண்டை போடுவதனை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தற்பொழுது அது குறைந்திருந்தாலும் யாராவது ஒருவர் அர்ச்சனாவை சீண்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி நேற்று நடைபெற்ற டாஸ்க் கூட நிக்சன் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா வந்ததற்கு பிறகுதான் இந்த வீட்டில் சண்டை ஆரம்பித்ததாக கூறியிருந்தார்.

இதனை அடுத்து இன்றைய ப்ரோமோவில் அர்ச்சனா வினுஷா குறித்து நீ என்ன சொன்ன என்பது நான் வெளியில் இருக்கும் பொழுதே தெரியும் என்று கூற இதனால் ஆத்திரமடைந்த நிக்சன் அதைப்பற்றி எல்லாம் நீ பேசாத என்று ஆவேசமடைய விக்ரம் தடுக்கிறார். அப்பொழுது அர்ச்சனா மரியாதையா பேசு போடா என்று கூற மேலும் கோபமான நிக்சன் நீ எல்லாம் ஒரு பொண்ணே இல்லை கருமம் என்று சொல்லிவிட்டு ஆத்திரமடைகிறார்.

முத்து – மீனாவை பிரிக்க பார்க்கும் ஸ்ருதி.! போற போக்க பார்த்தா விஜயாவ ஓவர்டேக் பண்ணுவாங்க போல.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அர்ச்சனாவிற்கு சமீப காலங்களாக மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வரும் நிலையில் இவர்தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இந்த வாரம் நிக்சன் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் புயல் காரணமாக இந்த வாரம் எந்த எலிமினேஷனும் கிடையாது என விஜய் டிவி அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்