BIGGBOSS 7 : பிரதீப் ஆண்டனியை திட்டம் போட்டு வெளியேற்றிய போட்டியாளர்கள்.! ரசிகர்கள் மத்தியில் எழும் கண்டனம்

Biggboss 7 : தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நான்கு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன இதில் இதுவரை அனன்யா, பாபா செல்லத்துரை, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி ஆகியோர் வெளியேறிய நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக பிரதீப் ரெட் கார்ட் பெற்று வெளியேறினார்.

நேற்று எபிசோட் முழுவதும் பிரதீப்பை பற்றி தான் இருந்தன.. கமலஹாசன் அகம் டிவி வழியே பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த உடனே ஜோவிகா, மாயா, பூர்ணிமா, நிக்சன், கூல் சுரேஷ், விஷ்ணு, மணி, ரவீனா போன்றவர்கள் பிரதீப்பின் நடவடிக்கை எங்களுக்கு பிடிக்கவில்லை கெட்ட வார்த்தையில் பேசுகிறார்.

அஜித்தை பற்றி குறையாக சொன்ன பிரபல இயக்குனர்.! அவர் மனைவியுடன் நடித்த அத்தனை படமும் ஹிட்.. ஆனாலும் இப்படி ஒரு பேச்சா..

அவர் கிட்ட எடுத்து சொல்ல எங்களுக்கு பயமா இருக்கு என்று சொல்கின்றனர் மேலும் பிக்பாஸ் வீட்டு பெண்கள் எங்களுக்கு பிரதீப்பால் சேஃப்டி இல்லை, தூங்க பயமா இருக்கு என பல குற்றச்சாட்டுகளை வைத்ததால் கடைசியில் போட்டியாளர்கள் அதிக பேர் பிரதீப்பிற்கு ரெக்கார்டு கொடுத்ததால் கமலஹாசன் பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பி விட்டார்.

இருந்தாலும் ரசிகர்கள் சிலர் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. மேலும் அவர்தான் டைட்டில் ஜெயிக்க இருந்தார் அந்த பயத்தில் தான் போட்டியாளர்கள் பிரதீப்பை வெளியேற்றி விட்டார்கள் எனவும் கமெண்ட் எழுப்பி வருகின்றனர்.. இந்த நேரத்தில் நடிகர் கவின் தனது நண்பர் பிரதீப் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இந்த முடிவு சரி இல்லை என்பது போல் பதிவிட்டிருக்கிறார்.

தலைவரே இது என்ன உலக மகா பித்தலாட்டமா இருக்கு.! இந்தியன் 2 படத்தின் இசையை அனிருத் எங்கிருந்து சுட்டுள்ளார் பார்த்தீர்களா..?

மேலும் பிரதீப் ஆண்டனியும் சமூக வலைதள பக்கங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் பெற்ற கோப்பைகள் என சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.. இந்த பதிவுகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன..