BIGG BOSS 7 : இந்த வாரம் டபுள் எவிக்ஷன்.. வெறும் கையுடன் போறத நினைச்சு புலம்பும் போட்டியாளர்கள்!

Bigg Boss 7 : சின்னத்திரையில் பிரபல ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 இறுதிக்கட்டத்தை நெருங்கி பயணித்து கொண்டிருக்கின்றன. கடந்த சீசன்கள் அனைத்திலுமே பிக் பாஸில் முதலில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான் வின் பண்ணினார்கள்..

வைல்டு கார்டாக இடையில் வருபவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்காது, ஆனால் இந்த சீசன் அதற்கு மாறாக ஆரம்பத்தில் வந்த போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் சுவாரசியம் குறைந்து காணப்படுவதால் வைல்டு கார்டில் வந்தவர்கள் சூப்பராக விளையாட ரசிகர்களின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது.

மனைவியை பக்கத்தில் வச்சுக்கிட்டு நடிகைக்கு அம்பு விட்ட 5 ஹீரோக்கள்.. அலறவிட்ட மிஷ்கின்

தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் தினேஷ், அர்ச்சனா, விஜய் வருமா, விஷ்ணு, மணிச்சந்திரா, விசித்ரா, மாயா போன்ற ஏழு போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் நாமினேஷனில் டிக்கெட் டூ பினாலே வின்னர் விஷ்ணுவை தவிர்த்து மீதம் 7 போட்டியாளர்கள் நாமினேட் ஆகியிருந்தனர்.. அதில் பூர்ணிமா சில தினங்களுக்கு முன்பு பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

மீதம் இருக்கும் 6 போட்டியாளர்களில் நான்கு பேர் தான் பினாலே வாரத்தில் இருக்க வேண்டும் அதனால் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பார்த்தால் இந்த வார ஓட்டிங்கில் அர்ச்சனா அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.. அடுத்தடுத்த இடங்களில் தினேஷ் மணிச்சந்திரா விசித்ரா போன்றவர்கள் உள்ளனர்.

ஆடையின்றி அமர்ந்தேன்.. அப்போ என் மனதில் தோன்றியது – மௌனம் கலைத்த பிரிகிடா சாகா..!

கடைசி இரண்டு இடத்தில் மாயா மற்றும் விஜய் வர்மா இருப்பதால் இந்த வாரம் கண்டிப்பாக இருவரும் வெளியேற வாய்ப்பு இருக்கிறது.  இதன் மூலம் டைட்டிலுக்கு ஆசைப்பட்டு பணப்பெட்டியையும்  கோட்டை விட்டுட்டு இந்த வாரம் மாயா எவிட் ஆக உள்ளார் என ரசிகர்கள் கேலி செய்கின்றனர்.. இன்னொரு பக்கம் சென்ற வாரம் போல் இந்த வாரமும் மாயாவை எவிக்ட் செய்யாமல் நம்மளை ஏமாற்றவும் வாய்ப்பு இருக்கு எனவும் கூறி வருகின்றனர்.