விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் படும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியல் கலர்ஸ் தமிழிலும் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது அந்த வகையில் தற்பொழுது இது குறித்து தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
அதாவது பெங்காளியில் சூப்பர் ஹிட் பெற்ற ஶ்ரீ மோயி என்ற தொடரின் ரீமேக் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியலில் தற்போது சுசித்ரா மற்றும் கோபி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
கோபி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த கதையை சுவாரஸ்யம் படுத்து வகையில் பழனிச்சாமி என்ற கேரக்டரில் பிரபல நடிகர் ரஞ்சித் நடித்து வருகிறார் எனவே கதை மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் கோபி பாக்கியா பழனிச்சாமி இரண்டாவது திருமணம் செய்து விடுவாரோ என்ற பயத்தில் கலாட்டா செய்து வருகிறார். இவ்வாறு போய்க் கண்டிருக்கும் நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
இதை கேட்டவுடன் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர் அதாவது என்னவென்றால் கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரண்டு தொடர்கள் இப்பொழுது கலர்ஸ் தமிழில் டைப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறதா எனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த இரு தொடர்களில் ஒரு தொடருக்கு பாக்கியலட்சுமி என பெயர் வைத்துள்ளனர். இவ்வாறு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலுக்கு பாக்கியலட்சுமி என பெயர் வைத்திருக்கும் நிலையில் ஆனால் கதை வேறு என்பது குறிப்பிடத்தக்கது.
