காக்கா – கழுகு சண்டை போடும் ரஜினி – விஜய்.. களத்தில் இறங்கி உதவி செய்த பாலா.. உண்மையான சூப்பர் ஸ்டார் யார்.?

KPY Bala : தமிழ்நாட்டை சமீபத்தில் உலுக்கியதுதான் மிக்ஜாம் புயல்.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அதை சுற்றி இருக்கும் சில மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து அனைத்தையும் நாசப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்  மக்கள் உணவுக்கு ரொம்பவும் அவதிப்பட்டனர்.

அரசு ஒரு பக்கமும் முன்னேற்பாடுகள் செய்ய மறுபக்கம் சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இறங்கி பொது மக்களுக்கு தன்னால் முடிந்த  காசோலை, உணவு, பால் பாக்கெட்  கொடுத்து உதவி செய்தனர். குறிப்பாக கே பி ஒய் பாலா 200 பேருக்கு தலா 1000 ரூபாய் கொடுத்து உதவி செய்தார்.

2023 – ல் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படங்கள்.. தயாரிப்பாளரின் பேச்சால் வசமாக மாட்டிக் கொண்ட விஜய் படம்

இதைப் பார்த்த பொதுமக்கள் பாலா உன் மனசை யாருக்கும் வராது எனக்கு கூட வராது உன் பெற்றோர்களும் உன்னை வளர்த்தவர்களும் தான் இந்த புகழ் எல்லாம் இன்று முதல் உனக்கு ரசிகன் நானும் என பலரும் வாழ்த்தி வந்தனர். இதே போல பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பல ஆம்னி வேன்களை அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாலா சென்னை மழையால் என்னால் வெளியே வர முடியவில்லை இல்லையென்றால் முன்னரே ஏதாவது பண்ணி இருப்பேன் அவரவர் தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளும் வசதியாக  200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன் 2015 அப்போ உதவி செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது.

கேப்டன் விஜயகாந்த் நடித்து தோல்வியான படங்கள்.. லிஸ்ட் பெருசா போகுது.?

ஆனால் அப்பொழுது காசு இல்லை இப்போ என்கிட்ட இரண்டு லட்சம் காசு இருந்தது அதை அப்படியே கொடுத்துள்ளேன் வந்தாரை வாழவைக்கும் சென்னை என்னையும் வாழ வைத்தது சென்னை தான் நம்மல பாத்துகிட்டது சென்னை தான் அதனால் நம்மால் முடிந்ததை இந்த ஊரை பாதுகாக்க வேண்டும் என்றார்.

பாலாவின் வேலை பார்த்த பலரும் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பாராட்டி வருகின்றனர் கோடி கோடியாக சம்பாதிக்கும் பிரபலங்கள் கூட இப்படி இறங்கி வந்து காசு கொடுத்தது கிடையாது ஆனால் வளர்ந்து வரும் பாலா இப்படி செஞ்சது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் அவரால் முடிந்ததை செய்து இருக்கிறார் என கூறி பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் சூப்பர் ஸ்டார் படத்திற்காக காக்கா கழுகு கதை சொல்லி சண்டை போட்டுக் கொள்ளும் ரஜினி விஜய் மத்தியில் சைலண்டாக ஆம்புலன்ஸ் மற்றும் பல உதவிகளை செய்து வரும் பாலா இதுவரை மூன்று கோடிக்கு மேல் வரை பணத்தை வாரி இறைத்திருக்கிறார் என கூறப்படுகிறது இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் எனவும் பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.