எனக்கு துரோகம் பண்ணி இருந்தாலும்.. பசங்களுக்கு நல்ல அப்பாவா இருக்கீங்க பாக்கியாவிடம் நல்ல பெயர் வாங்கிய கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode January 2 : பாக்யலட்சுமி இன்றைய எபிசோடில் அமிர்தா இந்த மாதிரி எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கல இப்ப என்ன பண்றதுனே தெரியல என்று ராதிகாவிடம் சொல்லிக்  புலம்புகிறார். அந்த நேரத்தில் இனியா ரூமுக்கு வந்து அக்கா இப்பதான் செல்வி ஆன்ட்டி நடந்ததெல்லாம் சொன்னாங்க ஜெனி அக்காவும் போயிட்டாங்க..

நீங்களும் எங்களை விட்டுட்டு போயிடுவீங்களா என்று இனியாவும் அமிர்தாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.. இன்னொரு பக்கம் ஈஸ்வரியும் இந்த வயசான காலத்துல இதெல்லாம் பாக்கணும்னு நமக்கு தலையெழுத்து நம்ம பையன் வாழ்க்கை தான் சரியில்ல பேரன்கள் வாழ்க்கையாவது   நல்லா இருக்கும்னு நினைச்சா அவங்க வாழ்க்கையிலும் இவ்வளவு பிரச்சனை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

வடிவேலுவை பகைத்துக் கொண்ட 5 நட்சத்திர ஹீரோக்கள்.. தர்ம அடி வாங்கிய வைகைபுயல்

அப்பொழுது பாக்யா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்று சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுக்கிறார். பிறகு ஈஸ்வரி இடம் பாக்யா அத்தை நான் எந்த தப்பும் பண்ணல என்னோட பசங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்னு நினைச்சு தான் அவங்களுக்கு புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணி வச்சேன், ஆனா அதுல இவ்வளவு பிரச்சனை ஆகும்னு எதிர்பார்க்கல என்று சொல்லி அழுகிறார்.

உடனே ஈஸ்வரியும் நீ என்ன பண்ணுவ உன்னோட பசங்க நல்லா இருக்கணும்னு தான் நினைச்ச பண்ண என்று ஆறுதல் சொல்லுகிறார்.. அடுத்து கோபியும் ராதிகாவிடம் எழிலோட நிலைமையை நினைத்து கூட பார்க்க முடியல யாருக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்தியன் 2 – வுக்கு எண்டு கார்டு போட்ட படக்குழு… இதோ அவர்களே வெளியிட்ட அப்டேட்..

அப்பொழுது ராதிகாவும் அந்த நேரத்துல யாருக்கு என்ன செய்யணும்னு தெரியல ஆனா நீங்க தான் அவன்கிட்ட கரெக்டா பேசினீங்க, நீங்க மட்டும் அப்படி பேசலனா வேற ஏதாவது பிரச்சனையாகி இருக்கும் என்று சொல்லுகிறார். அந்த நேரத்தில் பாக்யாவும் அங்கு வந்து கோபியிடம் நீங்க என்னைக்குமே ஒரு நல்ல அப்பாவா தான் நடந்து இருக்கீங்க, காலையில எனக்கே என்ன பண்றதுன்னு தெரியாம குழம்பி போய் நின்னேன்..

நீங்க மட்டும் பேசலனா என்ன வேணாலும் நடந்திருக்கலாம்  ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்கிறார் பிறகு கோபி பாக்கியாவிடம் அமிர்தா நம்ம பையன விட்டு எல்லாம் போக மாட்டா, தைரியமா இரு நான் எந்த பிரச்சனை வந்தாலும் நம்ம பாத்துக்கலாம் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது