கண்ணீரில் மிதக்கும் பாக்கியாவை துடைத்து விடும் கோபி.. வாய் பேசாமல் வேடிக்கை பார்க்கும் ராதிகா – பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ

Baakiyalakshmi serial Promo : பாக்கியலட்சுமி சமீபத்திய எபிசோடுகளில் கணேஷ் வீட்டிற்கு வந்து என்னோட பொண்ணையும் பொண்டாட்டியும் அனுப்பி வைங்க என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.. அதற்கு கோபி நீ செத்துட்டேன்னு நெனச்சு எழிலும் அமிர்தமும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு வருஷமா சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்காங்க..

திடீர்னு நீ வந்து கூப்பிட்டா எப்படி அவ வருவா, எங்க மருமகள அனுப்ப முடியாது அவ இங்க தான் இருப்பா, நிலாவும் எங்க வீட்டு பொண்ணு, இந்த மாதிரி ஒரு குழந்தை இருந்ததுன்னு உனக்கு தெரியுமா இப்ப வந்து உரிமை கொண்டாடுற வெளியே போ என்று கணேஷை திட்டுகின்றனர். அமிர்தாவும் நான் இங்கே இருந்து எங்கேயும் வரமாட்டேன் என்று கணேஷ் உடன் போக மறுக்கிறார்.

எனக்கு ஏம்பா கட்டவுட் தம்பி விஜய்க்கு மட்டும் கட்டவுட் வையுங்க.. விஜயகாந்தின் தங்க மனசை பற்றி தெரியுமா..

பிறகு ராமமூர்த்தி அமிர்தாவே நீ வந்த அதிர்ச்சியில் இருக்கா அதிலிருந்து மீண்டு வரவே எவ்வளவு நாள் ஆகும்னு தெரியல அதுக்குள்ள வந்து வா வான்னு கூப்பிட்டா எப்படி வருவா என்று கேட்க கணேஷ் நீங்க சொன்னது தான் கரெக்ட், அதான் பெரியவரே சொல்லிட்டாரு நான் வந்த அதர்சியில தான் அமிர்தா இருக்கா அதனால நான் இப்ப வீட்டுக்கு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு திரும்பி வரேன் அமிர்தா மனசு மாறி இருப்பா என் பொண்டாட்டி புள்ளைய கூட்டிட்டு போகிறேன் என்று சொல்லிவிட்டு கணேஷ் போய்விட்டார்.

இந்த நேரத்தில் பாக்கியலட்சுமி அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் கோபியும் ராதிகாவும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது பாக்யா கோபியிடம் வந்து இன்னைக்கு எல்லா விஷயமும் நடக்கும் பொழுது என்ன பேசுறது என்ன பண்றதுன்னு தெரியாம திணறி போய் இருந்தேன், நீங்க மட்டும் இன்னைக்கு பேசலனா என்ன வேணாலும் நடந்திருக்கலாம்..

மகாவை கிண்டல் செய்த ரவுடிகள்.. பழசை மறந்து இறங்கி வந்த சூர்யா.. குடும்பத்தில் அசிங்கப்பட்டு நிற்கும் ராஜலட்சுமி – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு போகிறார் பிறகு கோபி பாக்யாவை கூப்பிட்டு இப்படி ஒரு பிரச்சனையை யாரும் ஃபேஸ் பண்ணி இருக்க மாட்டாங்க, நீ நம்ப  பையன நினைச்சு கவலைப்படாத அமிர்தா நம்ம பையன விட்டுட்டு போக மாட்டா, எதுவா இருந்தாலும் நம்ம பாத்துக்கலாம் என்று சொல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளன.