மகாவை கிண்டல் செய்த ரவுடிகள்.. பழசை மறந்து இறங்கி வந்த சூர்யா.. குடும்பத்தில் அசிங்கப்பட்டு நிற்கும் ராஜலட்சுமி – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha Kalyanam serial Promo : ஆஹா கல்யாணம் சீரியல் சமீபத்திய எபிசோடுகளில் ராஜலட்சுமியை எதிர்த்து பேசியதால் சூர்யா மகாவை வீட்டை விட்டு கொட்டும் மழையில் வெளியே அனுப்பி விட்டார்.. இது தெரிந்து கோடீஸ்வரியும் தசாதரனும் வீட்டிற்கு வந்து ஞாயம் கேட்டனர்..

ஆனால் அவர்களது வார்த்தைக்கு யாரும் மதிப்பு கொடுக்காததால் பிறகு மகாவை வீட்டிற்கு அழைத்துப் போக முடிவெடுத்து வெளியே வரும்பொழுது சூர்யாவுடைய அப்பா வந்து என்னோட மருமகளை எங்க கூட்டிட்டு போறீங்க அவ இங்கதான் இருப்பா என்று மகாவை உள்ளே கூட்டிகொண்டு போய் உள்ளார்.

ஏன் லிஸ்ட்ல இதுதான் நல்ல படம்.. 2023ல் குட் மூவிஸ், அவரேஜ் மூவிஸ், ஜஸ்ட் மிஸ் என பிரிச்சி மேய்ஞ்ச ப்ளூ சட்டை மாறன்..

பிறகு மகா சூர்யா மற்றும் ராஜலட்சுமி இடம் போய் மன்னிப்பு கேட்கிறார் ஆனால் யாரும் மஹாவுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை இன்னும் மகா மேல் கோபத்தில் தான் இருக்கின்றனர்.. இவ்வளவு நடந்த பிறகும் மகா மீண்டும் அவங்க அப்பா அம்மா வீட்டுக்கு போய் வேலை செஞ்சாக வேண்டும் என்று தாத்தா பாட்டி இடம் அனுமதி கேட்டு சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் கல்யாணம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் மூன்று ரௌடி பசங்க மகாவை பார்த்து கல்யாணம் ஆயிடுச்சி போல, சும்மா சிக்குன்னு இருக்க நாங்க மூணு பேரா வண்டில வந்திருக்கோம். நாலு பேரா போலாமா என்று கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர் அந்த நேரத்தில் சூர்யா அங்கு காரில் வந்து இதைப் பார்த்து அந்த ரவுடிகளை அடித்து விட்டு மகாவை காரில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்..

மீனாவை பர்மனென்ட் வேலைக்காரி ஆக்கிய ஸ்ருதி.. கோபத்தில் முத்து – வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ..

காரில் வரும்போது மகா சூர்யாவிடம் அவங்க என்ன கேலி பண்ணது உங்களுக்கு கோபம் வந்துச்சு இல்ல என்று கேட்கிறார்.. அடுத்து வீட்டில் ராஜ லட்சுமி மகா வர நேரம் ஆயிடுச்சு அவ வந்ததும் அவ கிட்ட யாரும் பேசக்கூடாது என்று காயத்ரி சித்ராதேவி ஐஸ்வர்யா எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு சித்ராதேவி ஒருவேளை சூரியா மகா கிட்ட பேசிட்டா என்ன பண்றது என்று கேட்க ராஜலட்சுமி அவன் உடம்பில் ஓடுவது என்னோட ரத்தம் அவன் பேச மாட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மகாவும் சூரியாவும் ஒன்றாக காரில் இறங்கி வருவதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகிக் நிற்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளன..