அஜித் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.? அட இந்த நடிகரா இவர்..

Actor Ajith: நடிகர் அஜித்தின் மடியில் அமர்ந்திருக்கும் அந்த பையன் தற்பொழுது பிரபல நடிகர் என்பது தெரியவந்துள்ளது. தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்திற்குப் பிறகு பைக் பயணத்தை தொடர்ந்த அஜித் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவருடைய ரசிகர்களும் உள்ளனர். அங்கு அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர். இதற்கிடையில் தற்பொழுது நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் உருவாகி வரும் நிலையில் இதற்கான படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

யாரு செட்டிங்கா.. விசித்ரா, அர்ச்சனாவின் அதிரடி முடிவு.! கரார் காட்டும் கேப்டன் தினேஷ்

விடாமுயற்சி படத்தினை மகிழ் திருமேனி இயக்க சமீப காலங்களாக படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவரது மடியில் சிறுவன் ஒருவர் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அந்த சிறுவன் தற்பொழுது பிரபல நடிகர் என்பது தெரியவந்துள்ளது.

actor ajith kumar
actor ajith kumar

அதாவது அந்த குழந்தை வேறு யாருமில்லை அட்டகத்தி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் தினேஷ் தான். நடிகர் தினேஷ் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் சூப்பர் ஹிட் படத்தினை தர முடியாமல் தடுமாறி வருகிறார்.

attakathi dinesh
attakathi dinesh

இவரும் நடிப்பில் வெளியான அட்டக்கத்தி, குக்கூ, ஒரு நாள் கூத்து, திருடன் போலீஸ் உள்ளிட்ட படங்களின் மூலம் ஹிட் கொடுத்திருந்தாலும் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் ஹிட் படங்கள் வெளியாகவில்லை. எனவே தற்பொழுது சில திரைப்படங்களில் நடித்து வரும் தினேஷின் படங்கள் தரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.