அட்லீ – ஷாருக்கான் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.! லீக்கான புதிய புகைப்படம்.

atlee
atlee

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து எல்லாவற்றையும் நன்கு காத்துக் கொண்டு பின் இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தார் அட்லீ. முதலில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா போன்ற டாப் நடிகர், நடிகைகளை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தை எடுத்தார். இந்த படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட், காதல், காமெடி கலந்த திரைப்படமாக உருவானது.

படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ விஜய்யை வைத்து தெறி, பிகில், மெர்சல் போன்ற அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து அசத்தினார் இப்படி இருந்த நிலையில் நான்காவது முறையாக விஜயுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய்யோ..

அடுத்தடுத்த புதிய இயக்குனர்களை தேர்வு செய்ததால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது இதை உணர்ந்துகொண்ட அட்லீ தமிழில் பிரபல வைத்து படங்களை இயக்கியது போதும் என்பது போல உடனடியாக இந்தி பக்கம் தாவினார் அங்கு சூப்பர் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கானுக்கு கதையை சொல்லி உள்ளார்.

அது பிடித்துப் போக உடனடியாக அந்த படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது ஆனால் சில பிரச்சனைகளை ஷாருக்கான் சந்திக்க படக்குழு படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தியது தற்போது மீண்டும் இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு லயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதுவும் குறிப்பாக ராணுவ அதிகாரியாக நடிப்பார் என தகவல்கள் வெளிவருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் லயன் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அதில் ஷாருக்கான் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு செம்ம மாஸாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது இதோ நீங்களே பாருங்கள்.