எந்த வயதிலும் சாதிக்கலாம்.. 58 வயதில் இமாலய சாதனை படைத்த முத்துக்காளை வாழ்த்தும் ரசிகர்கள்..

Comedy Actor muthukaalai: நகைச்சுவை நடிகர் முத்துக்காளை 58 வயதில் மூன்று பட்டங்களை பெற்றிருப்பது குறித்து பேட்டி அளித்துள்ளார் ராஜபாளையத்தில் பிறந்த முத்துக்காளை கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றார். சண்டை பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆசையில் 18 வயதில் சென்னைக்கு வந்த முத்துக்காளை சினிமாவில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை அடுத்து 1997ஆம் ஆண்டு பொன்மனம் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இதனை தொடர்ந்து உயிர் நீதானே, நிலவே முகம் காட்டு உள்ளிட்ட பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க பிறகு நகைச்சுவை நடிகராக மாறினார். அப்படி இவருடைய கேரக்டர் பெரிதளவிலும் ரசிகர்கள் மத்தியில் ரீச்சாக ஒரு கட்டத்தில் வடிவேலுடனும் இணைந்து நடித்தார்.

கொட்டும் மழையில் மகாவை வீட்டை விட்டு வெளியே தள்ளிய சூர்யா.. விஷயம் தெரிந்து பதறி அடித்து ஓடி வந்த கோடீஸ்வரி.. பரபரப்பான கட்டத்தில் ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்..

அப்படி இவர்களுடைய கூட்டணியில் செத்து செத்து விளையாடலாமா என்ற காமெடி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. மேலும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சீனா தானா 001, விந்தை, கபாலி தோட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். வடிவேலுக்கு மார்க்கெட் குறைந்ததால் தொடர்ந்து முத்துக்காளைக்கும் பட வாய்ப்புகள் கிடைக்க முடியாமல் போனது.

இந்நிலையில் 58 வயதான முத்துக்காளை அண்மையில் வெளிவந்த B.Lit தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறியுள்ளார். 2017ஆம் ஆண்டு பி.ஏ வரலாறு படத்தில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார் அதன் பிறகு 2017ஆம் ஆண்டு எம்ஏ தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பிரதீப்ப காலி பண்ணியது பத்தாதுன்னு இப்ப லோகேஷா… நைசாக கோர்த்து விட்ட மாயா

தற்பொழுது B.Lit தமிழிலும் தேர்வெழுதி அதிலும் ஃபர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறியுள்ளார். சிறுவயதிலிருந்தே பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட முத்துக்களை தனது கனவை 58 வயதில் நிறைவேற்றி இருப்பதாக சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். தற்பொழுது அதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.