தென்னிந்திய சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலம் அடைந்துள்ளவர்தான் நடிகர் அரவிந்த்சாமி இவருடைய வித்தியாசமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென ஒரு தனி மவுசு இருந்து வருகிறது.
நடிகர் அரவிந்த்சாமி ஜூன் 1994ஆம் ஆண்டு சுவாமி காயத்ரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிறகு இவருக்கு ஆதிரா என்ற ஒரு மகளும், ருத்ரா என்ற மகனும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள் இந்நிலையில் அரவிந்த்சாமி 2012ஆம் ஆண்டு அபர்ணா முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் இவர் ஒரு படத்தில் உன் மனசுக்கு என்ன அரவிந்த்சாமினு நெனப்பா என்ற டயலாக் பெரிதளவில் பிரபலமானது. மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் சில வருடங்களுக்கு முன்னர் இவருடைய நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற திரைப்படம் வெளியானது காமெடி கலாட்டா நிறைந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் கடல் மற்றும் தனி ஒருவன் போன்ற திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு ஹிரோவாக நடித்து பிரபலம் அடைந்தாலும் அதே அளவிற்கு நெகட்டிவ் கதாபாத்திரங்களும் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. இந்நிலையில் தற்பொழுது இவர் வணங்காமுடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அரவிந்த்சாமி மகன் ஒரு வக்கீல் ஆவார்.

மேலும் இவருடைய மகள் கூட ஒரு பிரபலமான செப்தான் ஆனால் தற்பொழுது வரையிலும் இவர்களுடைய குழந்தைகளைப் பற்றி யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதாவது அரவிந்த்சாமியின் மகன் ஐபி திட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
இன்று ஐபி திட்டத்தில் பட்டம் பெற்ற எனது மகனைப் பற்றி பெருமைப்படுகிறேன் இந்த மயில் கல்லை எட்டிய மற்ற அனைவருக்கும் நான் செய்வது போல் உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையை ஒருமைப்பாடு மகிழ்ச்சியை அன்பு மற்றும் அமைதியுடன் நடத்துங்கள் உங்களை சுற்றிவுள்ள உலகிற்கு பயனுள்ளதாக இருங்கள் பெரிய கனவு காணுங்கள் அது எப்பொழுதும் சாத்தியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.