மடமடன்னு வளர்ந்துள்ள அருண் விஜய்யின் மகளை பார்த்துள்ளீர்களா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..

arun-vijay
arun-vijay

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை நீண்ட காலத்திற்கு பிறகு தக்க வைத்துக்கொண்டார், இவர் என்ன தான் வாரிசு நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க மிகவும் கடுமையாக போராட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

ஆரம்ப காலத்தில் அருண் விஜய் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார். ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமை மிக்க நடிகர்களில் ஒருவராக அருண் விஜய்யும் இருந்தார்.  இவர் 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் வலம் வந்தாலும் பல வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு அருண் விஜய் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அதிலிருந்து அருண் விஜய் தனது உடல் எடையை பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அதன்பிறகு அருண்விஜய் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார், இந்த தம்பதிகளுக்கு பூர்வி என்ற மகளும் அருணவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அருண் விஜய் தன்னுடைய மகனை சினிமாவில் களமிறங்கியிருக்கிறார் அதுவும் சூர்யாதான் அவரது மகனை சினிமாவில் அறிமுகம் செய்ய இருக்கிறார், மேலும் படத்தில் நடிப்பதற்காக ஆர்னவ் ஒரு மாத காலமாக கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்திற்காக.

மேலும் அருண் விஜய் தன்னுடைய குடும்பத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாடியுள்ளார் அந்தப் புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார் அதில் தன்னுடைய மூத்த மகளான பூர்வியும் அந்தப் புகைப்படத்தில் இருக்கிறார். பூர்வி முன்பை விட மடமடவென வளர்ந்து விட்டார் இதோ அந்த புகைப்படம்.