லியோவை பார்த்து அஜித் கத்துக்கிட்ட பாடம்.. விடாமுயற்சிக்கு போட்ட கண்டிஷன் – முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட்

Ajith : துணிவு திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

படத்தின் கதைக்கு ஏற்ப நடிகர் அஜித்குமார் 12 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார் அவருடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சஞ்சய் தத், பிக்பாஸ் ஆரவ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். படம் நிச்சயம் த்ரில்லர் கலந்த ஆக்சன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சினிமாவை ஒதுக்கி வேறு துறையில் சாதித்த வாரிசுகள்.! பல்லாயிரம் பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்த பிரபலம்

மேலும் அஜித் இரட்டைக் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அவர் சொன்னது லியோ படத்துக்கு நடந்த மாதிரி விடாமுயற்சியின் படத்துக்கு நடக்கக்கூடாது என அஜித் கண்டிஷன் போட்டுள்ளாராம்..

லியோ படம் உருவாகும் பொழுதே நிச்சயம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என பலரும் பேசினார். அந்த அளவிற்கு லியோ அப்டேட் கொடுத்து படத்தை எதிர்பார்க்க வைத்தது. ஆனால்  படம் வெளிவந்து மாட்டிக்கொண்டது முதல் பகுதி நன்றாக இருந்தாலும் இரண்டாவது பாதி இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் அது நடந்திருக்கும் அது நடக்கவில்லை.

மாடியில் டென்ட் போட்டு தூங்கிய ரவி – ஸ்ருதி.. கோபத்தில் இருக்கும் சுதா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இதனால் விடாமுயற்சி படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டையும் அவ்வளவு சீக்கிரத்தில் விடக்கூடாது என அஜித் கூறி இருக்கிறாராம். விடாமுயற்சி படம் மே ஒன்றாம் தேதி வெளி வரலாம் அல்லது அதற்கு முன்பே வெளியிட கூட படக்குழு முனைப்பு காட்டும் என செய்யாறு பாலு பேசிய உள்ளார் இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.