விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கெட்டப் இதுவா.? லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள்

Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவர் அஜித்குமார். இவருக்கு உடம்பில் ஏகப்பட்ட ஆபரேஷன்கள் செய்யப்பட்டிருந்தாலும் தன்னுடைய வெற்றி, தோல்வியில் பங்கு எடுத்துக்கொண்ட தன்னுடைய ரசிகர்களுக்காக அஜித் உடலையும் வருத்திக் கொண்டு வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

அந்த வகையில் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான  நேர்கொண்ட பார்வை, வலிமை,  துணிவு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கேப்டன்.! என்ன ஆனது? விஜயகாந்தின் தற்போதைய நிலை..

படம் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ரெஜினா நடித்து வருகின்றனர். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், அர்ஜுன் தாஸ் போன்றவர்களும் இந்த படத்தில் நடித்து வருவதாக ஒரு பேச்சி கிளம்பி உள்ளது. விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பது..

மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. முதல் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அடுத்தகட்ட சூட்டிங்  துபாய், அபுதாபி போன்ற இடங்களில் நடக்கப் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

தம்மாதுண்டு டிரெஸ்ஸை போட்ட ஐஸ்வர்யா.. பிளான் ஒர்க் அவுட் ஆகுது என நினைக்கும் கௌதம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

அந்த புகைப்படத்தில் அஜித் சற்று தாடி ட்ரிம் பண்ணி கூலிங் கிளாஸ் போட்டு செம்ம மாஸாக இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் விடாமுயற்சி படத்தின் கெட்டப்பா எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ செம்ம அழகாக இருக்கும் அஜித் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Ajith
Ajith