கமலுக்காக விட்டுக்கொடுத்து நின்ற அஜித் – புகழ்ந்து பேசும் பிரபல இயக்குனர்.!

ajith and kamal
ajith and kamal

நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இப்பொழுது ஜொலிக்க  காரணம் ஆரம்ப காலகட்டத்தில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் தான் என கூறப்படுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து ஆக்ஷன் மற்றும் காதல் படங்களில் நடித்து வெற்றியை கண்டு அசத்தினார்.

அதற்கு பக்கபலமாக பல இயக்குனர்கள் இருந்தார்கள் அவர்களில் ஒருவர் தான் சரண் இவர் முதலில் அஜித்தை வைத்து காதல் மன்னன் இன்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அசத்தினார். சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சரண்  நடிகர் அஜித் மற்றும் ஷாலினியை வைத்து அமர்க்களம்  என்னும் ஆக்ஷன் படத்தைக் கொடுத்தார் அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

பிறகு மீண்டும் அஜீத்தை வைத்து மூன்றாவது முறையாக அட்டகாசம் எனும் திரைப்படத்தை உருவாக்கினார் ஆனால் இந்தப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு உள்ளேயே  கமலுடன் சேர்ந்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது அதனால்  என்ன செய்வது என்று தெரியாமல் போனது முதலில் அஜித்தை வைத்து படம் இயக்குவதா அல்லது கமலை வைத்து இயக்குவதா என தெரியாமல்புலம்பிக் கொண்டிருந்தார் சரண்.

இந்த நிலையில் அஜீத் வந்து என்ன என்று கேட்டுள்ளார் அதற்கு சரண் கமல் பட வாய்ப்பு வந்துள்ளது அந்த படத்தை இப்போது இயக்க வேண்டும் என கூறி உள்ளார். அதற்கு அஜித் முதலில் கமலை வைத்து இந்த படத்தை எடுத்து விடுங்கள் பின் அட்டகாசம் படத்தை நாம் இணைந்து பணியாற்றலாம் என கூறியுள்ளார்.

அவர் சொன்னது போலவே  கமல் படத்தை எடுக்கும் வரை எனக்காக காத்துகொண்டு இருந்தார். பின் இருவரும் இணைந்து அட்டகாசம்  படத்தில் பணியாற்றினோம் அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது கூறினார் இயக்குனர் சரண்.