வெற்றி துரைசாமியும் அஜித்தும் எந்த அளவு நெருக்கம் தெரியுமா.? இந்த புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கே தெரியும்..

Ajith Kumar – Vetri Duraisamy’s friendship: நடிகர் அஜித் மற்றும் மறைந்த வெற்றி துரைசாமி பல வருடங்களாக நண்பர்களாக இருந்திருக்கும் நிலையில் இவர்கள் பல இடங்களுக்கு டூர் சென்றுள்ளனர். அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமியின் மகன் தான் வெற்றி துரைசாமி ஆவார்.

இவர் இமயமலைக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டு சென்ற பொழுது சட்லஜ் நதியில் சில நாட்க்கள் போராட்டத்திற்கு பிறகு இவரது உடல் மீட்டெடுக்கப்பட்டது பிறகு உடல்  சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த தகவல் அறிந்தவுடன் அஜித் வெற்றி துரைசாமியின் மறைவிற்கு நேரில் சென்று குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பிப்ரவரி 16 யை குறி வைத்த 23 திரைப்படங்கள்.. அட இத்தனை புது திரைப்படங்கலா

அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பு இல்லாததால் சென்னையில் இருந்து வந்தார் இந்த சமயத்தில் தனது நண்பர் வெற்றி துரைசாமியின் உடலுக்கு அவரது வீட்டிற்கு தனது மனைவி ஷாலினி உடன் சென்ற காட்சிகளின் புகைப்படம் வெளியானது. நடிகர் அஜித் பல ஆண்டுகளாக விமானங்கள் மீது அதிக ஆர்வம் உடையவராக இருந்து வருகிறார்.

மேலும் பைக் ரேஸ், கார் ரேஸ் என இதையும் தாண்டி மினி விமானங்களை தயாரித்து வருகிறார். இவருடன் வெற்றி துரைசாமியும் செல்வார் இருவரும் இணைந்து மினி விமானம் ஒன்றை பறக்க தயார் செய்யவும் பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில்  வைரலானது. அப்படி இந்தியா முழுக்க அஜித் பைக் டூ சென்ற பொழுது வெற்றி துரைசாமியும் சென்றிருந்தார்.

Ajith Kumar - Vetri Duraisamy's friendship
Ajith Kumar – Vetri Duraisamy’s friendship

இதனை அடுத்து இவருக்கு மிகவும் டிராவல் என்றால் பிடிக்குமாம் தனது அப்பா சைதை துரைசாமி போக வேண்டாம் என தடுத்தும் கடைசியாக ஒரு ட்ரிப் போயிட்டு வரேன் என வெற்றி துரைசாமி இமயமலைக்கு சென்றுள்ளார். இப்படி கடைசி ட்ரிப்பாகவே இது அமைந்துள்ளது. இந்த சூழலில் அஜித்துடன் பைக் ட்ரிப் சென்ற பொழுது அஜித்தும் வெற்றித் துரைசாமியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.