மற்ற நடிகர்கள் காட்டிலும் எல்லா ஏரியாவிலும் அஜித் தான் மாஸ் – திரையரங்குகளை அள்ளும் வலிமை.

valimai
valimai

நடிகர் அஜித்குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் வலிமை இந்த படத்தை சிறந்த இயக்குனர்  ஹச். வினோத் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, தமிழ் என நான்கு மொழிகளில் டப் செய்யப்பட்ட படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, யோகி பாபு, ஹுமா குரேஷி, குக் வித் கோமாளி புகழ் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அச்சத்தில் உள்ளனர்.

சமீப காலமாக திரையரங்கில் வெளிவந்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி பெரிய லாபத்தை ஈட்ட வில்லை ஏன் கடைசியாக வெளியான விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் கூட மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் படத்தை திரையரங்க உரிமையாளர்கள் வலிமை படத்தை மிகப் பெரிய அளவில் எதிர்நோக்கி உள்ளனர்.

அஜித்தின் வலிமை படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட அனைத்து திரையரங்குகளும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன அதிலும் குறிப்பாக மதுரையில் கிட்டதட்ட அனைத்து திரையரங்கிலும் வெளியாகிறது இதன் மூலம் மதுரையில் மட்டுமே மிகப்பெரிய ஒரு ஓப்பனிங் வசூலை இப்படம் அள்ளும் என தெரியவருகிறது.

சென்னையிலும் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளன இதனால் மிகப்பெரிய ஒரு வசூல் பெறுவதோடு மட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தின் வலிமை படம் வருவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் முதல் நாள் மட்டுமே கோலாகலமாக கொண்டாடுவார்கள் என தெரியவருகிறது.