தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் அப்டேட்காகவும்,ரிலிஸ்காகவும் பல கோடி ரசிகர்கள் காத்து வருகிறார்கள். இந்நிலையில் தல ரசிகர்கள் மோடியிடம் வலிமை அப்டேட் கேட்பது இதுபோன்ற செயல்களில் இறங்குவதால் தல அஜித் இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார்.
தல பொதுவாக பொது நிகழ்ச்சிகள்,பொது இடங்களில் பெரும்பாலும் பார்க்க முடியாது அதுமட்டுமல்லாமல் மற்ற நடிகர்,நடிகைகளைப் போல இவரது புகைப்படங்கள் இணையதளத்திலும் வெளிவராது.
அஜித் பைக் ரேசில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
Another Few More Latest Images Of Chief 💪🏼👌🏼#Valimai #AjithKumar #MTAFC pic.twitter.com/kuj4b6kb0b
— MALAYSIA THALA AJITH FAN CLUB ® 𝙑𝘼𝙇𝙄𝙈𝘼𝙄🔥💯 (@Thalafansml) February 25, 2021
இந்நிலையில் ஹைதராபாத்தில் விடியற்காலையில் தல அஜித் சைக்கிளில் சென்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
Thala 🚴♂️🚴♂️🚴♂️🚴♂️🚴♂️ pic.twitter.com/0RuTOwl1AA
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 25, 2021