Actress Sridivya’s Worst Behaviour: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் தனக்கு கிடைக்கும் கேரக்டர்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த ஸ்ரீ திவ்யா ஒரு கட்டத்தில் கவர்ச்சியாக நடிக்க முடியாது என பல கண்டிஷன்கள் போட்டு வந்ததால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
மேலும் தற்பொழுது முன்னணி நடிகர்களின் படங்களில் கிடைக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தினை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கி சட்டை படத்திலும் நடித்திருந்தார். மேலும் விஷாலுக்கு ஜோடியாக மருது உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்த ஸ்ரீதிவ்யா ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார்.
தற்பொழுது கார்த்திக் நடித்து வரும் மெய்யழகன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ரஜினி முருகன் படத்தில் ஸ்ரீ திவ்யா தான் நடிக்க வேண்டியது இருந்ததாம் ஆனால் அதற்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இதற்கு முக்கிய காரணம் காக்கிச் சட்டை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இமான் அண்ணாச்சி உடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு இரவு பார்ட்டி நடைபெற ஸ்ரீ திவ்யா குடித்துவிட்டு போட்ட ஆட்டம் வீடியோவில் சோசியல் மீடியாவில் வைரலாகி அவரது ஹோம்லி இமேஜை காலி செய்து விட்டதாம் அதன் பிறகு தான் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக நடிகை ஸ்ரீதிவ்யா தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு மொத்தமாக விலகி ஸ்ரீதிவ்யா இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாமல் போனது. மேலும் ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவ்வாறு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கான மவுசு இது வரையிலும் குறையவில்லை.